2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களைக் கவரும் வகையில் புதிய வருமான வரி முறையில், வரி பலகைகளை மறுசீரமைப்பு செய்து அறிவித்துள்ளது. இது நடுத்தர வர்க்க மக்களுக்குக் கட்டாயம் கூடுதல் பணத்தை அவர்களின் கையில் கொடுக்கும். இதன் மூலம் தனிநபர் நுகர்வை கணிசமாக மேம்படுத்தப்படும். மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் அறிவிக்கப்பட்ட புதிய வரி பலகை
ரூ.3,00,000 வரை - ஜீரோ வரி
ரூ.3,00,001 முதல் ரூ.7,00,000 வரை - 5% வரி
ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரை - 10% வரி
ரூ.10,00,001 முதல் ரூ.12,00,000 வரை - 15% வரி
ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரை - 20% வரி
ரூ.15,00,000 க்கு மேல் - 30% வரி

முந்தைய அளவீடுகள்
ரூ.3,00,000 வரை - ஜீரோ வரி
ரூ.3,00,001 முதல் ரூ.6,00,000 வரை - 5% வரி
ரூ.6,00,001 முதல் ரூ.9,00,000 வரை - 10% வரி
ரூ.9,00,001 முதல் ரூ.12,00,000 வரை - 15% வரி
ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரை - 20% வரி
ரூ.15,00,000 க்கு மேல் - 30% வரி
இதோடு புதிய முறையில் நிலையான கழித்தல் அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் 50000 ரூபாயில் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், செலுத்த வேண்டிய வரியில் இருந்து ரூ.75,000 கழிக்கப்படும்.
புதிய வருமான வரி பலகையில் 10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சுமையைக் குறைக்கும். புதிய முறையில் சம்பளம் வாங்குபவர்கள், முந்தைய முறையை விட ரூ.17,500 வரை வரி செலுத்துவதைக் குறைக்க முடியும்.
பட்ஜெட்டில் சோகமான விஷயம் என்னவென்றால் காலம் காலமாக அரசின் வரி சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு வந்த பழைய வரி முறையை பயன்படுத்துவோருக்கு எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் மத்திய அரசு மறைமுகமாக மக்களை புதிய வரி முறைக்கு கீழ் இழுக்கும் முயற்சியைக் கொண்டு உள்ளது.
யாரெல்லாம் புதிய வரி முறையை தேர்வு செய்யலாம்?
உங்களின் மொத்த வருமானம் ரூ. 15.75 லட்சத்திற்கு மேல் இருந்தால், வரி விலக்கு முதலீடுகள் ரூ. 4,33,333க்கு குறைவாக இருந்தால் மட்டுமே புதிய வரி முறையை தேர்வு செய்யலாம். இந்த இரு விதிகளை பூர்த்தி செய்யாமல் அதிக வருமானம் கொண்டவர்கள், அதிக வரி விலக்கு முதலீடுகளை கொண்டவர்களுக்கு பழைய வரி முறை தான் லாபகரமானது.


Click it and Unblock the Notifications