பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சியைப் பிடித்து இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. ஜூலை மாதம் கடைசியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு சில முக்கிய சலுகைகள் அளிப்பதற்கும், பொருளாதார அடிப்படையில் நடுத்தர மக்கள் செலவு செய்வதை ஊக்குவிக்கவும் அறிவிப்புகள் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.
2024-25 ஆம் ஆண்டிற்கு ஏற்கனவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் தற்போது முழு பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் அறிக்கையில் பழைய மற்றும் புதிய வருமான வரி அமைப்புகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக வரி பலகைகளில் மறுசீரமைப்பு மற்றும் புதிய வரி முறையில் வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது ஆகியவை கொண்டு வரப்படும் எனக் கணிக்கப்படுகிறது. இவை இரண்டும் பொருளாதார வளர்ச்சியையும், நுகர்வோர் செலவு செய்யும் அளவீட்டை அதிகரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழைய வருமான வரி அமைப்பு: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பழைய வருமான வரி அமைப்பின் கீழ் சில வரி பலகைகளை மறுசீரமைப்பு செய்யப்படும் எதிர்பார்ப்பு உள்ளது. ரூ.15 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான வரி பலகை சரிசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு 5% வரி விகிதம் பொருந்துகிறது, இது ரூ.15 லட்சம் வருமானத்திற்கு 30% வரை உயர்கிறது.
சுமார் ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கான வரி விகிதத்தைக் குறைப்பதையும், 30% என்ற அதிகபட்ச வரி விகிதத்திற்கான புதிய வரம்பைப் பற்றியும் மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
புதிய வருமான வரி அமைப்பு: இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்த்துள்ள புதிய வருமான வரி அமைப்பின் கீழ், தற்போதுள்ள ரூ.3 லட்சத்திலிருந்து வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கும் மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
நடுத்தர வர்க்கத்தினர் செலவு செய்வதை அதிகரிப்பதற்கும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் ஊக்குவிப்பதற்குமான உத்தியின் ஒரு பகுதியாக, கூடுதல் வருமான வரி விலக்கு அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
புதிய வரி முறையில், ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்கள் 30% என்ற அதிகபட்ச வரி வரம்பில் வைக்கப்படுகின்றனர், அதேசமயம் பழைய முறையில், ரூ.10 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு இந்த 30% வரி வரம்பு பொருந்தும். இதில் இருக்கும் வித்தியாசத்தைச் சரி செய்ய மத்திய நிதியமைச்சகம் இந்த பட்ஜெட் அறிக்கையில் முயற்சி செய்கிறது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications