பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி, தினமும் நாடாளுமன்றத்தில் அனல் பறக்க விவாதம் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி பருவகால கூட்டத்தொடர் தொடங்க உள்ள காரணத்தால் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது.
ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி 3.0 ஆட்சியின் முதல் வருடத்திற்கான பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான ரோட்மேப்-ஐ மத்திய பட்ஜெட் வாயிலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஜூலை 22ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிந்தைய கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடரும்.
"இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அழைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும்” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை மதிப்பீடு செய்து, பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வது வழக்கம். 2024ஆம் ஆண்டில், நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக, பட்ஜெட் இரண்டு கட்டங்களாகத் தாக்கல் செய்யப்படுகிறது.
முதலில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் அறிக்கை தேர்தல் முடியும் காலம் வரையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, 2வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு பதவியேற்றுள்ள நிலையில், மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications