இன்று காலை 11 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மூன்றாவது முறையாக பதவியேற்றிருக்கும் மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் PM கிசான் திட்டத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதோ? அந்தத் தொகையில் இந்த பட்ஜெட்டில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 60,000 கோடி பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்துக்காக (PM-KISAN) ஒதுக்கப்பட்டது. எனவே இந்தத் தொகையில் தற்போது அரசாங்கம் எந்த வித மாற்றமும் செய்யவில்லை.

நாட்டில் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு ஆண்டு வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM - KISAN) திட்டம்.
PM கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த 6000 ரூபாய் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி PM கிசான் திட்டத்தின் கீழ் 17-வது தவணையை வெளியிட்டார். 92.6 மில்லியன் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடி அனுப்பப்பட்டது. அதாவது இந்த திட்டம் ஆரம்பித்ததில் இருந்து 17வது முறையாக விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது.
PM கிசான் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 3.24 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், வோட் ஆன் அக்கவுண்ட் பட்ஜெட்டின் போது, இத்திட்டத்திற்கான தவணைத் தொகையை அரசாங்கம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் அது நடக்கவில்லை.
மேலும் விவசாயம் சார்ந்த நிபுணர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். மத்திய பட்ஜெட்டில் பிஎம்-கிசான் தவணைத் தொகையை ரூ. 6,000 ரூபாயிலிருந்து ரூ. 8,000-ஆக உயர்த்துமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
பிஎம் கிசான் திட்டத்திற்கான தவணைத் தொகையை அதிகரிக்காவிட்டாலும், வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமே இயற்கை விவசாயத்தை அதிகரிப்பது தான்.
மேலும் கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கும் திட்டத்தையும் 5 மாநிலங்களுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. கடந்த நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ. 1.26 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதிலிருந்து பார்த்தால் இந்த முறை வேளாண் துறைக்கு 0.27 சதவீதம் அதிகரித்து 1.52 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. சில பயிர்கள் பருவநிலை மாற்றங்கள் காரணமாக வீணாகும் சூழல் ஏற்படலாம். ஆகையால் இது போன்ற 152 வகை பயிர்களை நாடு முழுவதும் கொண்டு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டத்தின் எதிர்பார்ப்புகள் பொய்த்தாலும், விவசாயம் சார்ந்த பிற பட்ஜெட் அறிவிப்புகள் சற்று ஆறுதல் தரக்கூடியவையாக இருந்தன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications