நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால யூனியன் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் பணியின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் ஹல்வா விழா இன்று நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பின் "லாக்-இன்" செயல்முறை தொடங்கும் முன் ஒரு வழக்கமான ஹல்வா விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் போது நடக்கும் இந்த ஹல்வா விழாவில், இன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், இது ஆண்டுப் பட்ஜெட் இடைக்காலப் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை எப்படியிருக்கும் எனப் பல கணிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால். புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு பிற்பகுதியில் முழுப் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
இடைக்காலப் பட்ஜெட் என்பதால் கவர்ச்சியான அறிவிப்புகள் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் சிறிய வரி நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் சில நல திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரிச் சலுகைகள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வழக்கம் போல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் முந்தைய மூன்று முழு மத்திய பட்ஜெட்களைப் போலவே, 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டும் காகிதமற்ற டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதி அமைச்சகம் ஜனவரி 24 அன்று வெளியிட்ட அறிக்கையில், அனைத்துப் பட்ஜெட் ஆவணங்களும் 'யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்' டிஜிட்டல் முறையில் கிடைக்கும் என்றும், அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications