இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுவாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது பல்வேறு துறையினர்களுக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்களுக்கான எதிர்பார்ப்புகள் சற்று அதிகரித்து காணப்படுகின்றன. அந்த வகையில் பழைய வரி முறையின் கீழ் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை விரிவாக விவரிக்கிறது இந்தப் பதிவு.
மூன்றாவது முறையாக பதவியேற்று இருக்கும் மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாட்டுகளில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

என்னதான் புதிய வரி முறை கொண்டுவரப்பட்டாலும், பலருக்கும் பழைய வழிமுறை படித்த ஒன்றாக உள்ளது. எனவே அதில் சிலர் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். பேங்க் பஜார் இந்த பழைய வரி முறையில் சில மாற்றங்ள் செய்யப்பட முன்மொழிந்துள்ளது.
பழைய வரிமுறையின் கீழ் 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி விதிக்கப்படுகிறது. மேலும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. பொதுவாக நடுத்தர வர்க்கத்தினருக்கு இது போன்ற வரி வரம்புகளில் மாற்றங்கள் செய்வது அதிக லாபத்தை தரும் என்று பேங்க் பஜார் எதிர்பார்க்கிறது.
2013-ஆம் ஆண்டு முதல் பழைய வரி முறையின் கீழ் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே பேங்க் பஜார் தற்போது 30 சதவீத வரி ஸ்லாப்-ஐ 18 லட்சம் ஆக மாற்றியமைக்க முன்மொழிந்துள்ளது. இது தற்போது இருக்கும் ரூ.10 லட்சம் வரம்பை விட மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
கடந்த சில வருடங்களில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான கிரிஸில் ரொட்டி ரைஸ் ரேட் அறிக்கையில் கூட பணவீக்க அதிகரிப்பை நம்மால் காண முடிந்தது. எனவே பழைய வரிமுறையின் கீழ் வரி வரம்புகள் மாற்றப்படாமல் இருப்பதால் மக்கள் மீதான வரி சுமையும் அதிகரித்து வருகிறது.
2012-2013 ஆம் ஆண்டில் 200 ஆக இருந்த Cost Inflation Index, 2024-2025 ஆம் ஆண்டில் 363 ஆக உயர்ந்துள்ளது. இது 81.5% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கருத்தில் கொண்டு வரி வரம்புகளை உயர்த்த வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.
இதனால் வருமானம் குறைந்து வரியை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பேங்க் பஜார் முன் வைத்துள்ள திட்டங்களின் படி வரி வரம்புகளை உயர்த்துவது மூலம் பிரச்சனையை சரி செய்ய முடியும். இதன் மூலம் மக்கள் மீதான வரி சுமையையும் குறைக்க முடியும்.
உதாரணமாக தற்போது பழைய வரிமுறையின் கீழ் ரூ. 10 லட்சம் வருமானம் பெறுபவர் அதிகப்படியாக 43,226 ரூபாய் வரி செலுத்த வேண்டி உள்ளது. அப்படியானால் மாதத்திற்கு 3,602 ரூபாய். இதேபோல ரூ. 20 லட்சம் வருமானம் பெறுபவர் பழைய வரி முறையின் கீழ் ரூ.1.84 லட்சம் வரி செலுத்த வேண்டியுள்ளது. புதிய வரி முறையின் கீழ் 67,978 ரூபாய் வரி செலுத்த வேண்டியுள்ளது.
வாடகை, லோன் பேமெண்ட்கள், காப்பீட்டு பிரீமியம், வரி சேமிப்பு முதலீடுகள் போன்ற பல்வேறு விலக்குகளைப் பெறும் வசதி இருப்பதால் பலர் பழைய வரி முறையையே விரும்புகின்றனர். ஆனால், 2013-ஆம் ஆண்டு முதல் இந்த வரி வரம்புகள் பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படவில்லை. இதன் காரணமாக, மக்கள் அதிக வரிச் சுமையையும், உயரும் வாழ்க்கைச் செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பேங்க் பஜார் முன்மொழிந்துள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுமா? இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகுமா? என்பதைத் தெரிந்து கொள்ள நாம் ஜூலை 23-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications