2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்று தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அறிவிப்புகள் வெளியாகின. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் அறிவிப்பில் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு எந்தெந்த அறிவிப்புகள் வெளியாகும் என்று விவசாயிகள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், விவசாயம் சார்ந்த துறைகளுக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ. 1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பின் மூலம் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் சுமார் 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ரசாயனம் மற்றும் உரம் இல்லாத இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது அனைவரும் தங்களுடைய மாடி தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு ரசாயனம் இல்லாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கின்றனர். எனவே இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் மக்கள் அதிக அளவில் ரசாயனம் இல்லாத பொருட்களை வாங்க முன் வருவார்கள். இதன் காரணமாக விவசாயிகளின் சாகுபடி செலவு குறைவதோடு அவர்களின் லாபமும் அதிகரிக்கும்.
அதேபோல அனைத்து இடங்களிலும் காய்கறிகள் விநியோகம் கிடைக்கின்ற வகையில் உற்பத்தி மண்டலங்கள் உருவாக்கப்படும். சில பயிர்கள் பருவ நிலை மாற்றம் காரணமாக வீணாவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது போன்ற பயிர்களை ஆராய்ச்சி செய்து அவற்றை பருவநிலையை எதிர்த்து வீணாகாமல் வளரக்கூடிய வகையில் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அதேபோல பயோ உரங்களை உற்பத்தி செய்ய 10,000 இடங்களில் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்த PM கிசான் திட்டத்தின் கீழ் தவணைத் தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications