ரூ.1 லட்சம் கோடி: கவனிக்க மறந்த அறிவிப்பு.. மோடி அரசை பாராட்டியே ஆகனும்..!!

2024-25 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று இடைக்காலப் பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறும் 57 நிமிடத்தில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தாக்கல் செய்தார்.

புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டும், முதல் நிதியமைச்சர் என்ற வரலாற்று பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

ரூ.1 லட்சம் கோடி: கவனிக்க மறந்த அறிவிப்பு.. மோடி அரசை பாராட்டியே ஆகனும்..!!

இந்தப் பட்ஜெட்டில் வருமான வரியில் எவ்விதமான மாற்றத்தை அறிவிக்காதது சாமானிய மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சில அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகவும், நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 2024-25 ஆம் நிதியாண்டுக்கு நாட்டின் மொத்த மூலதன செலவின அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 11.1 சதவீதம் அதிகரித்து 11.11 லட்சம் கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டதை பலரும் பாராட்டி வரும் வேளையில், பலரும் கவனிக்க மறந்த ஒரு விஷயம் R&D.

உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் அனைத்தும் ஆராய்ச்சியில் அதிகப்படியான நேரத்தையும், பணத்தையும் முதலீடு செய்யும் வேளையில், இந்தியா பல வருடங்களாக இதில் பின்தங்கி வந்தது.

இந்த நிலையில் இந்தியா உலகின் டாப் 5 பொருளாதார நாடுகள் பட்டியலுக்குள் வந்த பின்பு, R&D, இன்னோவேஷன் பிரிவில் அதிகம் முதலீடு செய்ய வேண்டியது கட்டாயம், இதன் வாயிலாகத் தான் நாட்டின் வளர்ச்சியை நீண்ட காலத்திற்கு நிலைநட்ட முடியும் என்பதை மோடி அரசு உணர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை R&D துறையில் சன்ரைஸ் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.

50 ஆண்டு வட்டியில்லா கடனை தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட வளர்ச்சிக்காகச் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த நிதியை வைத்து நீண்ட காலத் தவணைகள் மற்றும் குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் நீண்ட கால நிதியுதவியை அரசு வழங்கும். இது அரசு நிர்ணயம் செய்துள்ள சன்ரைஸ் துறையில் செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்கத் தனியார் துறைக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+