நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று, நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவதை மையமாகக் கொண்டு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்தார். "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) அர்பன் 2.0 திட்டத்தின் கீழ், ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டில் தீர்க்கப்படும்," என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது கூறினார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும். அதாவது நீங்கள் பெரும் வீட்டுக் கடன்களுக்கு அரசு மானியங்களை வழங்கி வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட மக்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

மலிவு விலையில் அனைவருக்கும் வீடுகள் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு வட்டி மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி கூடுதல் வீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது கூறினார்.
மோடி அரசாங்கத்தின் லட்சிய திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் 2.0 திட்டத்தின் கீழ், ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டில் தீர்க்கப்பட உள்ளது.
2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இந்த இலக்கை அரசாங்கம் இன்னும் அடையவில்லை.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, PMAY திட்டத்தின் (PMAY-U) கீழ் 118.64 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதுவரை 85.04 லட்சம் வீடுகளை நிறைவு செய்து மக்களுக்கு வழங்கியுள்ளது.
கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதையும், மார்ச் 2024-ஆம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகள் கட்டுவதை இலக்காகக் கொண்டு, 2016-ஆம் ஆண்டில் PMAY-கிராமின் (PMAY-G) திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
பிப்ரவரி 2024-ஆம் ஆண்டுக்குள், 2.94 கோடி வீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், அதில் 2.55 கோடி வீடுகள் பிப்ரவரி 2024-க்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரவிருக்கும் மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, இத்திட்டத்தின் கீழ் வீடுகளின் எண்ணிக்கை மற்றும் நிதி உதவி தொகையை அரசாங்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications