மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. முன்னதாக தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய மாற்றங்களை செய்யவில்லை.
கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு சில வரி சலுகைகளை அறிமுகப்படுத்தியது. புதிய சட்டங்கள் தனி நபர்களுக்கு அதிக சலுகைகள் கொண்டதாக மாற்ற முயற்சி எடுத்தாலும், அது சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை என்பதுதான் மைய கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் 2023 பட்ஜெட்டில் மோடி தலைமையிலான அரசு அறிவித்த முக்கியமான வரி மாற்றங்கள்:
அ) அடிப்படை விலக்கு வரம்பு ரூ.2,50,000லிருந்து ரூ.3,00,000 ஆக உயர்த்தப்பட்டது.
ஆ) கூடுதல் வரி அளவு அதிகபட்சம் 25% ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இ) புதிய வருமான வரி முறையில் ரூ.50,00 ஸ்டாண்டர்டு டிடக்ஷன் அறிமுகம்
ஈ) வரி வரம்புகள் மாற்றியமைப்பு.
வரி சட்டங்களை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது தனிநபர்களின் ரூ.15,50,000க்கு மேலான வருமானம் கொண்டு இருக்கும் பட்சத்தில் ஸ்டாண்டர்டு டிடக்ஷன் இல்லாமல் 3,75,000 ரூபாய்க்கும் அதிகமான வரி விலக்கு கொண்ட முதலீடுகள் செய்திருந்தால் பழைய வருமான வரி தாக்கல் முறையே நல்லது. புதிய முறைப்படி அதிக வரி கட்ட வேண்டியிருக்கும்.
மேலும், வீடுகட்டும் செலவு அதிகரிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் அதிகளவு வீட்டு வாடகைப்படி மற்றும் முதலீடு சார்ந்த விலக்குகள் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.3,75,000 ஸ்டாண்டர்டு டிடக்ஷனை தாண்டுமானால் பழைய முறைப்படி வரி விதிப்பை பின்பற்றத் தொடங்குகின்றனர்.
எனவே புதிய வரித் திட்டத்தை கவர்ச்சிகரமாக ஆக்குவதற்காக அரசு ஒருங்கிணைந்த விலக்குகள் மூலம் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது.
குறிப்பிடத்தக்க மாற்றங்கள்:
1. புதிய திட்டத்தின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பை அதிகரித்தல் - வரக்கூடிய பட்ஜெட்டில் அடிப்படை விலக்கு ரூ.3,00,000லிருந்து ரூ.5,00,000க்கு உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. வருமான வரி விகிதத்தை குறைத்தல் - வருமான வரம்புகளை மாற்றியமைத்து வரி விகிதத்தையும் குறைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதவிர வேறு சில எதிர்பார்ப்புகளும் பட்ஜெட் மீது உள்ளன. அவை:
1. அதிகரிக்கப்பட்ட ஸ்டாண்டர்டு டிடக்ஷன்- இப்போதுள்ள ஸ்டாண்டர்டு டிடக்ஷனான ரூ.50,000, ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டாண்டர்டு டிடக்ஷன் உயர்த்தப்படவில்லை.
2. உரிமையாளர் குடியிருக்கும் வீட்டின் கடனுக்கான வட்டிக்கான விலக்கு வரம்பை ரூ.2,00,000லிருந்து ரூ.3,00,000 ஆக உயர்த்த வேண்டும்.
இதன் மூலம் எல்லாருக்கும் வீடு என்ற அரசின் நோக்கம் நிறைவேறும் அத்துடன் சொந்தமாக வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கையும் உயரும்.
3. கேபிடல் கெயின் வரி கட்டமைப்பு மாற்றம் - இப்போது பல வகையான வரி விகிதங்கள் உள்ளன. கேபிடல் கெயின் வரி சேர்ப்பின் போது தரும் சலுகைகள் பல வகையாக உள்ளது.
இதை தாண்டி எனவே வரி விகிதங்கள், கம்ப்யூட்டேஷன் முறை போன்ற அம்சங்களில் மாற்றங்களை அரசு செய்ய வேண்டும்.
கேபிடல் கெயின்ஸ் வரிவிதிப்பு மூலம் வரி விலக்கு வரம்பு அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசெலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் மிக நீண்ட பட்டியலைக் கொண்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களையாவது மத்திய அரசு செய்ய வேண்டும் என தனிநபர்களும் சம்பளம் வாங்குவோரும் எதிர்பார்க்கின்றனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications