இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையுடன் 2019 மே மாதத்தில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நிர்மலா சீதாராமன் முன்பு 2017 முதல் 2019 வரை நாட்டின் 28வது பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார், இதன் மூலம் இந்திரா காந்திக்கு பின்பு இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு அமைச்சராகவும், இரண்டாவது பெண் நிதி அமைச்சர் என்ற தனி பெருமை உள்ளது.

2019இல் அவர் பதவியேற்ற இரண்டே மாதத்தில் தனது முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இப்போது ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 1 ஆம் தேதியன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டின் மதுரையில் 1959 ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று நிர்மலா சீதாராமன் பிறந்தார். தனது பட்டப்படிப்பை அவர் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் முடித்தார்,. பின்னர் எம்ஏ பொருளாதார பட்டத்தை புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.
முன்னதாக அவர் விழுப்புரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி பள்ளியில் தொடக்கப்பள்ளிக் கல்வியையும் பின்னர் திருச்சி மற்றும் சென்னையில் உயர்நிலைக் கல்வி வரை படித்தார்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஆந்திர மாநிலம் நர்சாபுரத்தைச் சேர்ந்த தனது கணவரும், பொருளாதார நிபுணரும், வர்ணனையாளருமான பரகலா பிரபாகரை சீதாராமன் சந்தித்தார். நிர்மலா பாஜக பக்கம் சாய்ந்த நிலையில், அவரது கணவர் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1986ல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பரகலா பிரபாகர் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றினார், ஜூலை 2014 மற்றும் ஜூன் 2018 க்கு இடையில் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் கேபினட் அந்தஸ்தில் பதவி வகித்தார். பல ஆண்டுகளாக அவர் ஆந்திரப் பிரதேசத்தின் தொலைக்காட்சி சேனல்களில் நடப்பு விவகார விவாத நிகழ்ச்சியை வழங்கினார்.
நிர்மலா சீதாராமன் ஒரு சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ்வாக லண்டனில் உள்ள ரீஜென்ட் ஸ்ட்ரீட் ஹோம் டெக்கோர் ஸ்டோரில் வேலை பார்த்தார். இங்கிலாந்தின் அக்ரிகல்சுரல் இஞ்சினியர்ஸ் அசோசியேஷனில் ஒரு எக்கனாமிஸ்டின் அசிஸ்டெண்ட்டாக பணி புரிந்தார்.
பின்னர் PWC நிறுவனத்தில் சீனியர் மேனேஜராகவும் வேலை செய்தார். இங்கிலாந்தில் இருந்தபோது சில காலம் பிபிசி வேர்ல்டு சர்வீஸிலும் பணியாற்றினார். நேஷனல் கமிஷன் பார் விமன் அமைப்பில் நிர்மலா சீதாராமன் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தின் பிரணவா அமைப்பின் ஒரிஜினல் இயக்குநர்களில் ஒருவராக அவர் இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னதாக மறைந்த அருண் ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளில் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர், நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (தனிப் பொறுப்பு), மாநிலங்களவை உறுப்பினர், பாதுகாப்பு அமைச்சர்.


Click it and Unblock the Notifications