பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து சாதகமான அறிவிப்புகளை எதிர்பார்க்கும் மக்கள் மற்றும் தொழிற்துறையினருக்கு சர்க்கரைத் துறை முக்கியமானதாக விளங்குகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு விசாயிகள் கடுமையான நிதி நெருக்கடியிலும், அவர்களது விலை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் எப்போது கரும்பு விவசாயிகளுக்கு பொற்காலமாக மாறியுள்ளது.

கரும்புச்சாற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கு அதிக கொள்முதல் விலை, அதிகரித்த நியாயமான மற்றும் ஊதிய விலைக்கு (FRP) ஏற்ப குறைந்தபட்ச விற்பனை விலையில் (MSP) அதிகரிப்பு, மற்றும் எத்தனால் உற்பத்தி செய்வதில் சோளத்திற்கு பதிலாக கரும்பு பயன்படுத்த விருப்பம் ஆகியவை கருப்பு விவசாயிகளை குஷிப்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கான லாபி அமைப்பான, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (ISMA), எத்தனால் உற்பத்திக்காக கூடுதலாக 10-12 லட்சம் டன் சர்க்கரையை மாற்றுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிக்க திட்டமிட்டு வரும் வேளையில் இந்த கோரிக்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது. எத்தனால் உற்பத்திக்கு கூடுதல் சர்க்கரையை அனுமதித்த பிறகும், அடுத்த பருவத்தில் இரண்டு மாதங்களுக்கு தேவையான சர்க்கரை இருப்பு போதுமானதாக இருக்கும் என்தால் நுகர்வோர் சந்தையில் சர்க்கரை விலையும் அதிகரிக்காது என்பது இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் கருத்து (ISMA)
மக்காச்சோளத்துடன் ஒப்பிடும்போது கரும்பு நீர், ஊட்டச்சத்துக்கள், நில பயன்பாடு மற்றும் கார்பன் சுரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் சிறந்த பயிர் என்பதால், அரசுக்கு கரும்பு விவசாயிகள், எத்தனால் உற்பத்திக்கு கூடுதல் சர்க்கரை ஒதுக்கீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் நன்மை அளிக்கும். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை குறையும்.
இதனால் இந்த இடைக்கால பட்ஜெட்டிலும், அடுத்த சில மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டிலும் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி துறை அதிகப்படியான கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications