நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கியமான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் உலகளவில் இருந்து பெரு முதலாளிகள், பெரும் நிறுவனங்களை இந்தியா ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. இதன் விளைவாகப் பல துறையில் பல பில்லியன் டாலர்களை முதலீடாகப் பெற்றது மட்டும் அல்லாமல் இந்தியாவை ஏற்றுமதி மற்றும் உற்பத்தி பொருளாதாரமாக மாற்றும் பாதையை உருவாக்கியது.
இந்த நிலையில் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா மாறவும், சீனாவை நேருக்கு நேர் எதிர்த்து புதிய தொழில்துறைக் கொள்கையை நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இடைக்காலப் பட்ஜெட்டில் முன்வைக்குமா..?

கடந்த மூன்று தசாப்தங்களில், அதாவது 30 ஆண்டுகளில் இந்தியாவின் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் பல்வேறு சீர்திருத்தம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 17 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்க உதவியுள்ளது.
கோவிட்-19 இந்தியாவைத் தாக்கியபோது, சீனாவில் இருந்து வெளியேறி உற்பத்தி நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் 2020 ஆம் ஆண்டில் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம் அறிமுகம் செய்த போது இந்திய உற்பத்தி துறைக்குப் புதிய சக்தி கிடைத்தது.
கடந்த 4 வருடத்தில் PLI திட்டம் சுமார் 14 குறிப்பிட்ட துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 3-5 சதவீத ஊக்கத்தொகையை வழங்குகிறது. மேலும் இந்தக் கொள்கையின் இறுதி இலக்கு, இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதாகும்.
கடந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் புதிய தொழில் கொள்கை, அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கட்டத்தில் உள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உயர்த்துவதற்காக, உலக அளவில் போட்டி நிறைந்த வணிகச் சூழலை இந்தியாவில் உருவாக்குவதாகும்.
இந்தக் கொள்கை பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்காலப் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டால் 1956 மற்றும் 1991-க்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது தொழில்துறைக் கொள்கையாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications