நிர்மலா சீதாராமன் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பட்ஜெட் அரசின் வருவாய் மற்றும் செலவுகளை வரும் நிதியாண்டிற்கு விளக்கமாக எடுத்துக் கூறும் வகையில் இருக்கும். இந்த கட்டுரையில் கடந்த 5 ஆண்டு பட்ஜெட்டுகளில் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதி விவரங்களை விரிவாக பார்ப்போம்.

2024 முதல் 2025ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டின் துறை வாரியான ஒதுக்கீடுகள்:
பாதுகாப்புத் துறை அமைச்சகம்: ரூ.6.2 லட்சம் கோடி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை: ரூ.2.78 லட்சம் கோடி
ரயில்வே அமைச்சகம்: ரூ.2.55 லட்சம் கோடி
மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம்: ரூ.2.13 லட்சம் கோடி
உள்துறை அமைச்சகம்: ரூ.2.03 லட்சம் கோடி
ரசாயணங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்: ரூ.1.68 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சகம்: ரூ.1.77 லட்சம் கோடி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்: ரூ.1.27 லட்சம் கோடி
தொலைத்தொடர்புத் அமைச்சகம்: ரூ.1.37 லட்சம் கோடி
FY24 மத்திய பட்ஜெட்டின் துறை வாரியான ஒதுக்கீடுகள்:
பாதுகாப்புத் துறை அமைச்சகம்: ரூ.5.94 லட்சம் கோடி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம்: ரூ.2.70 லட்சம் கோடி
ரயில்வே அமைச்சகம்: ரூ.2.41 லட்சம் கோடி
மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம்: ரூ.2.06 லட்சம் கோடி
உள்துறை அமைச்சகம்: ரூ.1.96 லட்சம் கோடி
ரசாயணங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்: ரூ.1.78 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சகம்: ரூ.1.60 லட்சம் கோடி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்: ரூ.1.25 லட்சம் கோடி
தொலைத்தொடர்பு அமைச்சகம்: ரூ.1.23 லட்சம் கோடி
FY23 மத்திய பட்ஜெட்டின் துறை வாரியான ஒதுக்கீடுகள்:
பாதுகாப்புத் துறை அமைச்சகம்: 5.25 லட்சம் கோடி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம்: ரூ.1.99 லட்சம் கோடி
ரயில்வே அமைச்சகம்: ரூ.1.40 லட்சம் கோடி
மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம்: ரூ 2.17 லட்சம் கோடி
உள்துறை அமைச்சகம்: ரூ.1.85 லட்சம் கோடி
ரசாயணங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்: ரூ.1.07 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சகம்: ரூ.1.38 லட்சம் கோடி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்: 1.32 லட்சம் கோடி
தொலைத்தொடர்பு அமைச்சகம்: ரூ.1.05 லட்சம் கோடி
FY22 மத்திய பட்ஜெட்டின் துறை வாரியான ஒதுக்கீடுகள்:
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை: ரூ.54,581 கோடி
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்: ரூ.73,932 கோடி
கல்வித் துறை அமைச்சகம்: ரூ.93,224 கோடி
ரயில்வே அமைச்சகம்: ரூ.1.10 லட்சம் கோடி
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்: ரூ.1.18 லட்சம் கோடி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்: 1.31 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சகம்: ரூ.1.33 லட்சம் கோடி
உள்துறை அமைச்சகம்: ரூ.1.66 லட்சம் கோடி
மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம்: ரூ.2.56 லட்சம் கோடி
பாதுகாப்புத் துறை அமைச்சகம்: ரூ.4.78 லட்சம் கோடி
FY21 மத்திய பட்ஜெட்டின் துறை வாரியான ஒதுக்கீடுகள்:
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை: ரூ.50,040 கோடி
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்: ரூ.67,112 கோடி
ரயில்வே அமைச்சகம்: ரூ.72,216 கோடி
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்: ரூ.91,823 கோடி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்: 1.42 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சகம்: ரூ.1.22 லட்சம் கோடி
உள்துறை அமைச்சகம்: ரூ.1.67 லட்சம் கோடி
மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம்: ரூ.1.24 லட்சம் கோடி
பாதுகாப்புத் துறை அமைச்சகம்: ரூ.4.71 லட்சம் கோடி
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்: ரூ.99,312 கோடி


Click it and Unblock the Notifications