மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்தச் சில மணிநேரத்தில் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்தச் சில மாதத்தில் பொதுத் தேர்தல் நடக்க உள்ள வேளையில் தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு கட்டாயம் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிப்புகளை வெளியிடும் என்பது மக்கள் மத்தியில் இருக்கும் முக்கியக் கருத்து.
ஆனால் மோடி தலைமையிலான அரசு இந்த இடைக்காலப் பட்ஜெட்-ஐ எப்படிக் கையாளப்போகிறது என்பது மிகவும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இதேவேளையில் இந்த இடைக்காலப் பட்ஜெட்டில் தமிழகத்தின் மீதான எதிர்பார்ப்பு என்ன..?

மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கு மூலதனச் செலவினத்திற்குச் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை எப்போதும் இல்லாமல் அதிகப்படியான தொகையை ஒதுக்கீடு செய்தது. மூலதனச் செலவின தொகை கடந்த 4 வருடமாக ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது.
இந்த அளவீடு தொடர்ந்தால் மத்திய அரசு 2024-25 ஆம் நிதியாண்டில் 13 முதல் 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சந்தை கணிப்பின் படி இந்த ஆண்டு 10.2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கணிக்கப்பட்ட படி 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டால் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி கிடைக்கும், எய்ம்ஸ் மதுரை, செங்கல்பட்டு - திண்டிவனம் - திருச்சி ஜிஎஸ்டி விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதற்கான நிதி கிடைக்கும்.
நீண்ட காலமாக முன்மொழியப்பட்ட புதிய ரயில் பாதை மேம்பாட்டு, விரிவாக்க பணிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபோல் தற்போது ஆய்வு பணிகள் துவங்கப்பட்டு உள்ள கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே பெரும் பகுதி இருவழிச் சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.
இதேவேளையில் இது இடைக்காலப் பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கப்படமாட்டாது.


Click it and Unblock the Notifications