ஐடி - டெக் ஊழியர்கள் பட்ஜெட் 2024ல் எதிர்பார்ப்பது இதுதான்.. ஆனா கிடைத்தது என்ன..?

இடைக்காலப் பட்ஜெட் அறிவிப்புகள் இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகப்படியான வொயிட் காலர் வேலைவாய்ப்புகள் உருவாக்குவது மட்டும் அல்லாமல் நாட்டின் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவது இந்தத் துறை தான்.

இந்திய ஐடி மற்றும் டெக் துறை இந்த இடைக்காலப் பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்புகள் இதுதான், சைபர்செக்யூரிட்டி சிக்கல்களைத் தீர்ப்பது, இன்னோவேஷன்-க்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதுடன், இத்துறைக்கான திமையான கட்டமைப்பை உருவாக்குவது தான்.

ஐடி - டெக் ஊழியர்கள் பட்ஜெட் 2024ல் எதிர்பார்ப்பது இதுதான்.. ஆனா கிடைத்தது என்ன..?

இந்தப் பட்ஜெட் மூலம் நாட்டின் ஸ்டார்ட்அப் எகோசிஸ்டத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் AI, பிளாக்செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும், அதைச் சார்ந்த சேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் இருந்தே அதற்கான கல்வி முறையை வலியுறுத்த வேண்டும்.

இதேபோல் AI, பிளாக்செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒழுங்குமுறை செயல்முறைகளை எளிதாக்குவது, உள்கட்டமைப்பை அதிகரிப்பது மற்றும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது மிக முக்கியமானது.

இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்களின் தலையாய அமைப்பான நாஸ்காம், வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட்அப்கள், தற்போதுள்ள வெளிப்புற கட்டமைப்புகளுக்குள்ளேயே, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட அனுமதி அளிக்க 2024-25 பட்ஜெட்-க்கு முக்கியப் பரிந்துரையாக முன்வைத்துள்ளது.

இது தவிர, இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இணையப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும், முக்கியமான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், விழிப்புணர்வை வளர்ப்பதற்கும் முன்னுரிமை அளிப்பது மத்திய அரசின் மிக முக்கியக் கடமையாகும்.

பட்ஜெட்டில் கிடைத்தது என்ன?:

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள் மார்ச் மாதத்தில் காலாவதியாகும் நிலையில் இதை மார்ச் 2025 வரை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 வருட ஆட்சி காலத்தில் 7 ஐஐடி, 16 ஐஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

இதேபோல் STEM பிரிவில் எப்போதும் இவ்லாத வகையில் அதிகப்படியான அதிகப்படியான பெண்கள் சேர்வதாகவும் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.

பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முறை கடனுதவி அளிக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை R&D துறையில் சன்ரைஸ் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிதியை 50 ஆண்டு வட்டியில்லா கடனை தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட வளர்ச்சிக்காகச் தனியார் துறைக்கு வழங்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+