பட்ஜெட் தினத்திற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey), இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்த நிதியாண்டிற்கான அரசின் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கையில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சம் அதன் மைய கருத்து (central theme) ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மைய கருத்து (central theme) என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
2022 'அஜைல் அணுகுமுறை': இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் மூலம் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார பாதிப்புகளைக் களையவும், நாட்டின் பொருளாதாரத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்ற மைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு ஊக்கு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அறிக்கையும், பொருளாதார ஆய்வறிக்கையும் வெளியிட்டது.

தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
2023 பொருளாதார மீட்சி முழு அடைந்தது : 2023ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின் மையத் கருத்து, கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் முழுமையாக மீட்சி அடைந்ததைக் குறிப்பிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டது.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், தொழில் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை நிலவரம் ஆகியவை இந்த அறிக்கையில் முக்கியமானதாக ஆராயப்பட்டன.
2024ஆம் ஆண்டிற்கான மைய கருத்து என்னவாக இருக்கும்?
இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் மைய கருத்து என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாக இல்லை, இருப்பினும் சில சாத்தியமான விஷயங்கள் வைத்து பார்க்கும் போது, இதுவாக தான் இபருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
உதாரணமாக, உலகளாவிய பொருளாதார சவால்களை மையமாகக் கொண்டு இந்தியா வேமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்த சூழ்நிலையை மேலும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளலும், சீனா பிளஸ் ஓன் சென்டிமென்ட்-ஐ லாபகரமான பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டு முதலீடுகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் ஈர்க்க முக்கியமான விஷயங்களை டார்கெட் செய்து இந்த பட்ஜெட் இருக்கலாம். இதன் ஒரு பகுதியாக ஆத்மநிர்பர் திட்டத்தையும், 2050 இலக்கை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளுக்கான உற்பத்தி துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் சாதகமான அறிவிப்புகளை வெளியிடலாம்.
இந்த பொருளாதார அறிக்கையை அடிப்படையாக கொண்டு, பட்ஜெட்டில் பசுமை பொருளாதாரம், டிஜிட்டல்மயமாக்கல் அல்லது உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை மையமாகக் கொண்ட திட்டங்களை வெளியிடும் வகையில் இந்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய கருத்தை கொண்டிருக்கலாம்.
பொருளாதார ஆய்வறிக்கை வெளியான பிறகு, அதன் மையத் தலைப்பு மற்றும் அதன் பொருள் ஆகியவை பற்றிய விரிவான தகவல்களை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் விரிவாக வழங்கப்படும், தொடர்ந்து இணைந்திடுங்கள். இந்த பொருளாதார ஆய்வறிக்கையானது, பட்ஜெட்டில் எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதற்கான முன்னோட்டமாகவும் அமையும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications