ஒரே கல்லில் மூன்று மாங்காய்.. நிர்மலா சீதாராமன் செய்யப்போவது இதுதானா..?

2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட் ஜூலை 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள வேளையில், 3வது முறையாக ஆட்சியை அமைத்துள்ள மத்திய அரசு இந்த பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவிலான சர்ப்ரைஸ் அளிக்கும் என எதிர்பார்த்து கத்திருக்கின்றனர்.

இதிலும் குறிப்பாக வருமான வரி செலுத்துவோர் மற்றும் நிதி நிபுணர்கள் இந்த பட்ஜெட்டில் புதிய வரி விலக்குகள் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது தற்போதுள்ள விலக்குகளில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பதை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதேவேளையில் வரி குறைப்பு கட்டாயம் இருக்கும் என தீவிரமாக நம்புகின்றனர்.

ஒரே கல்லில் மூன்று மாங்காய்.. நிர்மலா சீதாராமன் செய்யப்போவது இதுதானா..?

மத்திய அரச ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் நிதி திட்டமிடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த பட்ஜெட் வலிமையான பேஸ்மென்ட் அமைக்க கூடியது.

இந்த நிலையில் ஜூலை 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வரி விலக்குகளா அல்லது வரி பலகை எளிமைப்படுத்துவதா மத்திய அரசின் சாய்ஸ் எதுவாக இருக்கும் என்பது தான் முக்கிய விவாதமாக உள்ளது.

தற்போது இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு வரி விலக்குகள் உள்ளன. உதாரணமாக, பிரிவு 80 சி பிரிவின் மூலம் தனிநபர்களின் சேமிப்புகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முதலீடுகளை சேர்த்து இப்பரிவின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கிறது.

ஆனால், மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 2020 ஆம் ஆண்டில் குறைந்த வரி விகிதங்கள் கொண்ட புதிய வரி முறையை அறிமுகம் செய்தது மூலம் இன்று வரையில் மக்களுக்கு எது சிறந்த தேர்வு என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. இதேபோல் புதிய வரி முறையின் கீழ் மக்கள் முதலீடு செய்ய ஊக்குவிப்பது கிடையாது என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் தனிநபரின் வருமான வரி அமைப்பை சிக்கலாக்கியுள்ளது.

இந்த நிலையில் ஸ்பேஸ் மந்த்ரா நிறுவனர் நிதி அகர்வால் கூறுகையில், "பழைய மற்றும் புதிய வரி முறைகள் சிக்கலை உருவாக்கியுள்ளது. புதிய முறை எளிமையாக இருந்தாலும், பல வரி செலுத்துவோர் இன்னும் வரி விலக்குகளை பெரிய அளவில் மதிக்கிறார்கள். வரவிருக்கும் பட்ஜெட் இதைக் கருத்தில் கொண்டு, நீண்ட கால நிதி திட்டமிடலுக்கான தெளிவான ஊக்கங்களை புதிய வரி முறையில் வழங்க வேண்டும்" என கூறியுள்ளார்.

புதிய வரி விலக்குகளை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், வரி பலகைகளை எளிமைப்படுத்துவதற்காகவும் அரசு தற்போதுள்ள சில விலக்குகளை குறைக்கவோ அல்லது மறுசீரமைப்பு செய்யவோ செய்யலாம். இது அரசுக்கு கூடுதல் வரி வருவாயை ஈட்டுவதற்கும் உதவும். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் 3 விஷயம்.

பிரிவு 80சி வரம்பு உயர்வு: பல ஆண்டுகளாக இந்த பிரிவின் கீழ் வழங்கப்படும் வரி விலக்கு உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாகவே இருந்து வருகிறது. இதை உயர்த்துவதற்கும், இந்த பிரிவின் கீழ் வரும் முதலீட்டு திட்டங்களுக்கான முதலீட்டு வரம்புகளை மறுசீரமைப்பு செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வீட்டு கடனுக்கான வட்டி விலக்கு: தற்போது சொந்த வீடு வாங்குவோருக்கு அளிக்கப்படும் வீட்டு கடன்களுக்கான வட்டித்தொகை மீதான விலக்கு ரூ.2 லட்சமாக உள்ளது. இதில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

Standard Deduction: மாத சம்பளக்காரர்கள் Standard Deduction அளவீட்டை அதிகரிக்கும திட்டத்தை மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் நம்புகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+