மத்திய பட்ஜெட் ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் நெருங்கி வருவதால் பல்வேறு துறையினரை சேர்ந்தவர்களும் தங்களுடைய எதிர்பார்ப்புகளை முன்மொழிந்து வருகின்றனர். அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையினரும் இந்த பட்ஜெட்டில் சில மாற்றங்கள் ஏற்படுமா? என்று எதிர் நோக்குகின்றனர். அதன்படி மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana - PMAY) திட்டத்தில் சில நல்ல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தற்போது இந்தியாவில் மலிவு விலையிலான வீடுகள் பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் 90 சதுர செண்டிமீட்டர் வரையிலும் முதன்மையான பெரு நகரங்களில் 60 சதுர செண்டிமீட்டர் வரையிலும் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இதன் மதிப்பு ரூ.45 லட்சம் வரை உள்ளது.

ANAROCK நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, மலிவு விலையிலான வீடுகளின் விற்பனை 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 37 சதவீதத்திலிருந்து, 2023-ஆம் ஆண்டில் 20 சதவீதமாகக் வீழ்ச்சி அடைந்துள்ளது. மலிவு வீடுகள் விற்பனை வீழ்ச்சியால் பெங்களூரு உள்ளிட்ட பல பெருநகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பெங்களூருவில் மலிவு விலையிலான வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளது.
வீடு விற்பனையின் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற மானிய திட்டங்களில் ஏழை மக்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன?: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும். அதாவது நீங்கள் பெரும் வீட்டுக் கடன்களுக்கு அரசு மானியங்களை வழங்குகிறது.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள்: இந்த திட்டத்தின் கீழ், வீட்டுக் கடனுக்கான வட்டித்தொகையில், கடன் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு அரசு 6.5% வட்டி மானியம் வழங்கும். இதன் மூலம், வீட்டுக் கடன் பெறுவது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். வட்டி மானியம் ரூ.6 லட்சம் கடன் தொகைக்கு மட்டுமே பொருந்தும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு மானியம் கிடைக்காது. கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டி மானியத்தை நேரடியாக பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பார்கள். இதன் காரணமாக, EMI குறைந்து, வீட்டுக் கடனின் மொத்த தொகையும் குறையும்.
PMAY திட்டத்தின் பயனாளிகள்: இந்தத் திட்டத்தில் தற்போது குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (LIG), நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG) மற்றும் EWS உள்ளிட்ட பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் அனைவரும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாகக் கருதப்படுகிறார்கள். EWS-இன் ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சமாகவும், LIG-களின் வரம்பு ரூ. 3 முதல் ரூ. 6 லட்சமாகவும், MIG-களின் வரம்பு ரூ. 6 முதல் ரூ. 18 லட்சமாகவும் உள்ளது.
தற்போது இந்த EWS மற்றும் LIG பிரிவுகளின் வருமான வரம்புகளை பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. EWS வரம்பை ரூ 4.8 லட்சமாகவும், LIG வரம்பை தற்போதைய ரூ.6 லட்சத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ 9.2 லட்சமாகவும் உயர்த்த வேண்டும். வீட்டுவசதி அளவு EWS-க்கு 60 சதுர மீட்டராகவும், LIG-க்கு 90 சதுர மீட்டராகவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று "Grihum Housing Finance Limited" நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மணீஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
வீடு வாங்குவதற்காக கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகை நீடிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தற்போதுள்ள ரூ.1.5 லட்சம் வரம்பையும் அதிகரிக்க வேண்டும் என சந்தை நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது 80EEA பிரிவின் கீழ், முதல் முறையாக வீடு வாங்கும் இந்திய குடிமக்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications