பட்ஜெட் 2024: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த போகிறதா மோடி அரசு..?!

சென்னை: பொது தேர்தலில் 3வது முறையாக ஆட்சியைப் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான மற்றொரு கோரிக்கை மத்திய அரசுக்கு வைக்கப்பட்டு உள்ளது.

8வது சம்பள கமிஷன் அமைப்பது மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசு ஜூலை 23 ஆம் தேதி அறிவிக்கும் பட்ஜெட்டில் வெளியிடுமா என்பது நாட்டு மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

பட்ஜெட் 2024: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த போகிறதா மோடி அரசு..?!

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம், கொடுப்பனவுகள், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளை மாற்றியமைக்க 8வது சம்பள கமிஷன் அமைக்குமாறு பல பணியாளர் குழுக்கள் மத்திய அரசை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.பி.யாதவ், நாடாளுமன்ற செயலாளருக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் அமலாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இதோடு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கொரோனா தொற்றுநோய் காலத்தில் போது மத்திய அரசு நிறுத்தி வைத்த 18 மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண தொகையை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

உண்மையில் 2024 பட்ஜெட்டில் 8வது சம்பள கமிஷன் அமைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதா..?

சிங்கானியா & கோ நிறுவனத்தில் பார்ட்னராக பணியாற்றும் ரித்திகா நயார், கூறுகையில் "பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்திருக்கும் வேளையில், 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதேவேளையில் சம்பள கமிஷன் அமைப்பதற்கான காலக்கெடுவும் நெருங்கி வருகிறது, ஆனாலும் இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்குச் சலுகை அளிக்கும் விதமாக நடப்பு நிதியாண்டில் வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள சில தேர்தல் வாக்குறுதிகளில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 8வது சம்பள கமிஷன் வரும் என தீவிரமாக நம்புகின்றனர். 2026 ஜனவரியில் அமலாக்கம் செய்யப்பட வேண்டிய 8 வது சம்பள கமிஷன் வலுவாக வாதிடும் அதே வேளையில், நாட்டின் நிதிநிலையை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் சாத்தியமில்லை என கணிக்கப்படுவதாக கூறினார்.

ஆனால் 8வது சம்பள கமிஷன் அமைக்கப்படுவதற்கான பணிகள் துவங்குவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்.

ஏழாவது சம்பள கமிஷன் 2014 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் அமைக்கப்பட்டது. இக்குழு 2015 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது, மேலும் 7வது சம்பள கமிஷன்வின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

சம்பள கமிஷன் அமைப்பதில் பத்து வருட இடைவெளி இருப்பதால், அடுத்தாக 8வது சம்பள கமிஷன் 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்பிற்கு முன்பு இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA), மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பயிற்சி துறை (DoPT) கீழ் இயங்கும் பணியாளர், மக்கள் குறைதீர்ப்புகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சகத்திற்கு 8வது சம்பள கமிஷன் உருவாக்குவது குறித்தும், அதன் தேவை மற்றும் அவசியம் குறித்து கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+