டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி-இல் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக வரி சேமிப்பு என வரும்போது ஊதியம் பெறக்கூடிய தனிநபர்கள் பழைய வரி நடைமுறையில் இருக்கக்கூடிய பிரிவு 80சி பயன்படுத்தி தாங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுவார்கள்.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி-இன் கீழ் ஊதியம் பெறக்கூடிய தனி நபர்கள் முதலீடுகளை குறிப்பிட்டு காட்டி 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். அந்த வகையில் பெரும்பாலான ஊதியம் பெறக்கூடிய தனிநபர்கள் பொது வருங்கால வைப்பு நிதி, 5 ஆண்டு நிலையான வைப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
தற்போதைய சூழலில் 80சி பிரிவின்கீழ் ஒரு தனி நபருக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை அவர்கள் மேற்கொண்ட முதலீடுகளுக்கான வரிவிலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த 1.5 லட்சம் என்ற வரம்பானது அமலில் இருக்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட இந்த பத்து ஆண்டு காலத்தில் பல்வேறு செலவினங்கள் அதிகரித்துவிட்டன. இத்தகைய சூழலில் அரசு இந்த 1.5 லட்சம் என்ற வரம்பினை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. பழைய வரி நடைமுறையில் வருமான வரி தாக்கல் செய்யக்கூடிய நபர்கள் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் என்ற வரம்பினை அரசு உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
புதிய வரி நடைமுறையை பொறுத்தவரை இந்த பிரிவு எதுவும் கிடையாது. 1.5 லட்சம் ரூபாய் என்ற வரி விலக்கு வரம்பினை 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஊதியதாரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேபோல வருமான வரி அடுக்குகளிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு மாறுபவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
வருமான வரி உச்சவரம்பினை அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்காக செலுத்தும் தொகைகளுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80டி-இன் கீழ் வரி விலக்கு பெற முடியும். இது தற்போது 50,000 ரூபாய் என இருக்கிறது. இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
வீட்டு கடன்களுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்காக செலுத்தப்படும் தொகைகளுக்கு வழங்கக்கூடிய வருமான வரி விலக்கினை தனிநபருக்கு 25,000இல் இருந்து 50,000 ரூபாய் என்ற அளவிலும் மூத்த குடிமக்களுக்கு 50,000இல் இருந்து 75,000 என்ற அளவிலும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
தற்போது இருக்கக்கூடிய மூலதன ஆதாய வரி என்பது சிக்கலான விகிதங்களை கொண்டிருக்கிறது, எனவே அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மேலும் பெருநகர நகரங்களில் வசிப்பவர்களுக்கான ஹவுஸ் ரெண்ட் அலோவென்ஸ் எனப்படும் ஹெச்.ஆர்.ஏ விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஊதியதாரர்கள் முன்வைக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications