லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2.0 ஆட்சியின் கடைசிப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாக வியாழக்கிழமை இடைக்காலப் பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்தார்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கத்தால் முழுப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில் இடைக்காலப் பட்ஜெட் திட்டத்தில் யாரெல்லாம் நன்மை அடைந்துள்ளனர், யாரெல்லாம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வேளாண்மை - நன்மை அடைந்தவர்கள்
எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம், நவீன சேமிப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகள் உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் தனியார் மற்றும் பொது முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவை இந்தப் பட்ஜெட்டில் வெளியான விவசாயத் துறை உற்பத்தியாகப் பார்க்கப்படுகிறது.
பால் மற்றும் மீன் - நன்மை அடைந்தவர்கள்
இதேபோல் பால் பண்ணையாளர்களின் மேம்பாட்டிற்காக ஒரு விரிவான திட்டத்தைத் திட்டமிட்டு வருகிறது, மேலும் மீன்வள துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க இத்துறை செலவினங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள் - நன்மை அடைந்தவர்கள்
கிராமப்புற மக்கள் சொந்த வீடு வாங்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அடுத்த 5 வருடத்தில் 2 கோடி வீடுகளுக்கு நிதியுதவி அளிக்க உள்ளது.
சுற்றுலா - நன்மை அடைந்தவர்கள்
சுற்றுலா மையங்களை மேம்படுத்தவும், உலக அளவில் அவற்றைச் சந்தைப்படுத்தவும் மத்திய அரசு மாநிலங்களை ஊக்குவிக்கும். சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லாக் கடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதில் லட்சத்தீவு முக்கியக் கவனத்தைப் பெறும் என்றும் சுற்றுலா துறைக்கான துறைமுக இணைப்பு முதல் சற்றுலா துறை கட்டமைப்புகளைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - நன்மை அடைந்தவர்கள்
காற்றாலை மின்சார உற்பத்தியில் இருக்கும் இடைவெளியை குறைக்க 1 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா நெட் ஜீரோ இலக்கை அடைய திட்டமிட்டுள்ளதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மக்கள் ஏற்றுக்கொள்ள மானியத் திட்டத்தை அறிவிக்க உள்ளது. இதில் முக்கியமாகச் சோலார் திட்டத்தின் மூலம் 300 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் வழங்க உள்ளது.
எலக்ட்ரிக் வாகனம் - ஏமாற்றம் அடைந்தவர்கள்
மத்திய அரசு பொதுப் போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் சார்ஜிங் கட்டமைப்பை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 1.2 பில்லியன் டாலர் மானிய திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும், நீட்டிப்புச் செய்வது குறித்தும் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
உள்கட்டமைப்பு - ஏமாற்றம் அடைந்தவர்கள்
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூலதன செலவினத்தில் தொடர்ந்து 30 சதவீத உயர்வான தொகையை ஒதுக்கீடு செய்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு 11 சதவீத உயர்வை மட்டுமே அறிவித்து 11.11 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இன்றைய வர்த்தகச் சூழ்நிலையில் 11 சதவீத உயர்வு போதுமானதாக இருந்தாலும், எதிர்பார்த்த 30 சதவீத உயர்வு கிடைக்காதது பெரும் ஏமாற்றம்.
நகை கடைக்காரர்கள் - ஏமாற்றம் அடைந்தவர்கள்
இந்தப் பட்ஜெட்டில் தங்க பார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் பெரியதாக இருந்தது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications