டெல்லி: 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பின் வரக்கூடிய ஐந்து அறிவிப்புகள் வரவேண்டும் என நாடு முழுவதும் பரவலாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரி விகிதங்களில் மாற்றம்: இந்தியாவில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கான வருமான வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால் அரசு வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே நுகர்வு போக்கு அதிகரிக்கும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கும் என FICCI துணைத்தலைவர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.

எரிபொருளுக்கான வரியை குறைப்பது: இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீது விரிக்கப்படக்கூடிய கலால் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை. சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய செலவாகவும் பல பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகவும் இருக்க கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
துறை சார்ந்த தொழில் ஊக்குவிப்பு: சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில்களில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும், உற்பத்தி துறையில் முதலீட்டை உயர்த்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட துறைகளில் இயங்கும் நிறுவனங்களை இலக்காக வைத்து கொள்கைகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் கவனம் தேவை: கிராமப்புறங்களில் நுகர்வு போக்கு குறைந்து வருவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என கூறும் தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குனர் சந்திரதீப் பானர்ஜி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 267 ரூபாயிலிருந்து 375 ரூபாயாக உயர்த்த வேண்டும் , விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரக்கூடிய 6000 ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்த வேண்டும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பிரத்தியேக சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
சீனாவின் செயல்பாடுகளால் கவலை: சீனா அதிகளவிலான பொருட்களை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்வது இந்திய தொழில்களை பாதிக்கிறது. எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்களை பாதுகாக்கவும், நியாயமான தொழில் போட்டியை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Story Written By: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications