பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று மத்திய அரசு யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. அதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக தாக்கல் செய்கிறார். நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட்டில் விவசாய துறைக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிசான் கிரெடிட் கார்டு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக அமைந்துள்ளது. அதாவது விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு கடனுக்கான வரம்பு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான கிசான் கிரெடிட் கார்டு வரம்பு அதிகரிப்பை அரசு இப்போது நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகளுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம். இதன் மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதுடன், அவர்கள் பெறும் வருமானமும் அதிகரிக்கும்.
1998 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் குறுகிய கால பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. 9% வட்டி விகிதத்தில் விவசாயிகள் இந்த கடனை பெறலாம். அத்துடன் வட்டியில் அரசு 2 சதவிகிதம் மானியமும் தருகிறது. கடனை உரிய காலத்தில் திருப்பியளிக்கும் விவசாயிகளுக்கு 3% கூடுதல் சலுகையும் உண்டு.
இதன்மூலம் வெறும் 4% வட்டியில் விவசாயிகள் கடன் பெறலாம். விவசாயிகள் மட்டுமின்றி கால்நடை, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களை செய்து வருபவர்களும் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications