மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையின் போது, 6 உயிர்காக்கும் மருந்துகள் சலுகை விலையான 5 சதவீத வரிவு அடுக்கில் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் முக்கியமான மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், முழு விலக்கு மற்றும் சலுகை வரி இப்போது சில மொத்த மருந்துகளுக்கு பொருந்தும். 36 கூடுதல் உயிர்காக்கும் மருந்துகளுக்கான சுங்க வரிகள் நீக்கப்படும். இந்த மருந்துகளில் புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் அடங்கும்.
இதன் மூலம் அவர்கள் (நோயாளிகள்) மீதான பண சுமை குறைவதோடு, இந்த மருந்துகள் அவர்களுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்புகள், ஆர்த்தி டிரக்ஸ்,சிப்லா, அபோட் இந்தியா, அஜந்தா பார்மா, அகும் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ், அல்கெம் லேபரேட்டரீஸ். அஸ்ட்ராசெனெகா பார்மா, பயோகான், லுப்பின், டாக்டர் லால் பாத் லேபரேட்டரீஸ் போன்ற மருந்து உற்பத்தி நிறுவனங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் பார்மா துறைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் இருந்ததால், லுப்பின் மற்றும் சிப்லா உள்ளிட்ட மருந்து துறையை சேர்ந்த பங்குகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே லுப்பின் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் ரூ.30க்கு மேல் உயர்ந்து ரூ.2,111.50ஐ எட்டியது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சிப்லா நிறுவன பங்கின் விலை சுமார் ரூ.8 உயர்ந்து ரூ.1,488.35ஆக அதிகரித்தது.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த போது, நமது பொருளாதாரம் அனைத்து முக்கிய உலக பொருளாதாரங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளின் நமது வளர்ச்சி பதிவு மற்றும் கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவின் திறன் மற்றும் ஆற்றலில் நம்பிக்கை இந்த காலகட்டத்தில்தான் வளர்ந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் வளர்ச்சி (சப்கா விகாஸ்) என்பதை உணர ஒரு தனித்துவமான வாய்ப்பாக நாம் பார்க்கிறோம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
story written by: Subramaian


Click it and Unblock the Notifications