2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி நெருங்கி வருகிறது. அரசின் நிதிநிலை குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் வரும் ஆண்டிற்கான பொருளாதார கொள்கைகளின் வரைபடத்தை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த ஆண்டு டிசம்பரில் முக்கிய பொருளாதார நிபுணர்களுடன் சந்திப்புகளை நடத்தினார்.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அவை முன்னணி தொழிலதிபர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது வருமான வரி விகிதங்கள், விலக்குகள், ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அதோடு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கலாம், அதேசமயம் வேலை வாய்ப்புகளை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான நிதி நிகழ்வாக மத்திய பட்ஜெட் இருக்கும். இதில் புதிய அரசாங்கக் கொள்கைகள், வரிவிதிப்பு முறைகள் மற்றும் பிற முக்கிய நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கல் இடம்பெறும்.
நிர்மலா சீதாராமன் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்வார்?: கடந்த 10 ஆண்டுகால பாரம்பரியத்தை தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் மத்திய பட்ஜெட் தேதி குறித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஆனால் இதற்கு முன்னர் பிப்ரவரி 1 சனிக்கிழமைகளில் வந்திருந்தாலும், அப்போதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று சனிக்கிழமை வந்தாலும் பங்குச்சந்தைகள் பட்ஜெட்டிற்காக திறந்திருக்கும். நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகிய இரண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை வழக்கமான வர்த்தக நேரங்களில் செயல்படும்.


Click it and Unblock the Notifications