சென்னை: இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனது முக்கிய எதிர்பார்ப்புகளை பி.எச்.டி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (PHDCCI) மத்திய நிதியமைச்சகத்திடம் சம்ர்ப்பித்துள்ளது.
பொதுவாக ஓவ்வொரு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மத்திய, மாநில அரசுக்களுக்கு வர்த்தக அமைப்புகள் பல்வேறு பரிந்துரைகளை முன்வைக்கும். இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து தேவையாக இருப்பில் அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு பின்பு பட்ஜெட் அறிக்கையில் சேர்க்கும் முடிவை நிதியமைச்சர் தலைமையிலான ஏ டீம் எடுக்கும்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, வரி சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த அந்தந்த அமைப்புகள் பரிந்துரையை முன் வைத்துள்ளது.
2024-25 நிதியாண்டில் ரூ.48.2 லட்சம் கோடியாக இருந்த மொத்த பட்ஜெட் அளவை (Budget size) 2025-26 நிதியாண்டில் ரூ.51 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்று PHDCCI வலியுறுத்தியுள்ளது. பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கவும் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிக்கவும் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதை விட முக்கியமாக PHDCCI அமைப்பு கொடுத்த மற்றொரு பரிந்துரை என்னவென்றால், பட்டியலிடப்பட்ட பங்குகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) சமீபத்தில் 10% இலிருந்து 12.5% ஆக உயர்த்தப்பட்டது. இந்த தாக்கத்தைத் தணிக்க, பங்குச் சந்தை பரிவர்த்தனை வரியை (STT) ரத்து செய்ய அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.
STT-ஐ நீக்குவதன் மூலம், அரசு முதலீட்டாளர்கள் மீதான ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும், இதன் மூலம் பங்குச் சந்தையில் அதிகமான பங்களிப்பை ஊக்குவித்து பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் 2025-26 நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்காக (Capex) ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்வது மூலம் நாட்டின் உள்கட்டமைப்பில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து, வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கவும் உதவும். கடந்த ஆண்டு இதன் அளவு 11.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான A TEAM இந்த SST வரியை குறைக்கும் பரிந்துரையை ஏற்குமா என்பது பெரும் சந்தேகம்.


Click it and Unblock the Notifications