மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது அவரது எட்டாவது பட்ஜெட் தாக்கல் ஆகும். மோடி 3.0 ஆட்சியில் இது அவரது இரண்டாவது முழுமையான பட்ஜெட்டாக உள்ளது.
இந்த பட்ஜெட்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை மேம்படுத்தும் முக்கிய இலக்கை கொண்டிருக்கும் மத்திய அரசு, இதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த உள்ளது. பொது மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மூலதனச் செலவினத்தை 10 சதவீதம் அதிகம் வரையில் அதிகரிக்கப் போகிறது மத்திய அரசு.

மேலும் உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் போன்ற முக்கியமான திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் மோடி 3.0 அரசின் 2வது பட்ஜெட் கவனம் செலுத்தும். மேலும், சமூக நலத் திட்டங்களை விரிவாக்கம் செய்யவும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்று வருமான வரி அளவுகளைக் குறைப்பதும், வரி பலகையை மறுசீரமைப்பதும் தான். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் லிவ்விங் காஸ்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது மூலம் அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து நிவாரணம் அளிக்கவும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் தாக்கத்தைக் குறைக்கவும் வருமான வரி குறைப்பு முக்கியமானதாக உள்ளது.
2027-28 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்ற திட்டத்தை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை அடைவதில் இந்த பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும்.
டெய்லிஹண்ட் தளம் மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யும் போதும் மக்களுக்கு விரிவான மற்றும் உடனடி செய்திகளை வழங்கும். ஒவ்வொரு வருடமும் வழங்குவது போல் இந்த ஆண்டும், டெய்லிஹண்ட் தளம் லைவ் அப்டேட்கள், ஆழமான செய்திகள், பகுப்பாய்வுகள் மற்றும் நிபுணர் கருத்துகள் ஆகியவற்றை அளிக்கிறது. பட்ஜெட் குறித்து அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள டெய்லிஹண்ட் உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications