2025-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் திருமணமான தம்பதிகள் இணைந்து வரி செலுத்தும் விதமாக, கூட்டு வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்த இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா (ICAI) முன்மொழிந்துள்ளது. இப்போதுள்ள வரி முறையின்படி திருமணமான தம்பதிகள் தனித்தனியாக வரி தாக்கல் செய்கின்றனர். இதனால் அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது.
எனவே கூட்டு வரிவிதிப்பு முறையில் தம்பதிகள் தங்கள் வருமானத்தை ஒன்றாக கருதி வரியை செலுத்தலாம். ஏற்கனவே இதுபோன்ற வரி விதிப்பு முறை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளன. எனவே திருமணமான தம்பதிகள் கூட்டு வருமான வரி தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ICAI பரிந்துரைத்துள்ளது.

சிராக் சவுகான் என்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட் தனது X பதிவில், ICAI பரிந்துரையின் படி திருமணமான தம்பதிகள் ஒன்றாக வரி செலுத்த அனுமதிப்பதை பரிந்துரைக்கிறது. அதன்படி ரூ.7 லட்சம் தனிநபர் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கவும், திருமணமான தம்பதிகளின் வரிவிதிப்பு வரம்பை ரூ.14 லட்சமாக அதிகரிக்கவும் கூறியுள்ளது. வருகின்ற பட்ஜெட்டில் இந்த புதிய வரிமுறை அறிமுகப்படுத்தப்படுமா? என்ற கேள்வியையும் முன்வைத்து போஸ்ட் செய்திருந்தார்.
புதிய கூட்டு வரிவிதிப்பு முறையின் கீழ் திருமணமான தம்பதிகள் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ வரி தாக்கல் செய்வதில் ஒன்றைத் தேர்வுசெய்ய முடியும் என்று ICAI பரிந்துரைக்கிறது.
கூட்டாக வரி தாக்கல் செய்யும் தம்பதிகளுக்காக முன்மொழியப்பட்ட வரி அடுக்குகள்:
ரூ.6 லட்சம் வரை: வரி இல்லை
ரூ.6 முதல் ரூ. 14 லட்சம்: 5 சதவீதம் வரி
ரூ.14 முதல் ரூ. 20 லட்சம்: 10 சதவீதம் வரி
ரூ.20 முதல் ரூ. 24 லட்சம்: 15 சதவீதம் வரி
ரூ.24 முதல் ரூ.30 லட்சம்: 20 சதவீதம் வரி
ரூ.30 லட்சத்திற்கு மேல்: 30 சதவீதம் வரி
கூட்டு வரி முறையின் கீழ், அடிப்படை விலக்கு வரம்பு தற்போதைய ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவேளை இந்த புதிய வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டால் அது திருமணமான தம்பதியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications