2025 முதல் 2026-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்று தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிக அளவில் குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியது. அப்போது தங்கத்திற்கான சுங்கக் கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டது. இந்த முறையும் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டியை குறைக்குமாறு நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை அரசாங்கம் இவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டால் இந்த முறையும் பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை மலிவாகலாம். ஆனால் அறிவிப்பு வெளியானால் மட்டுமே இதன் உண்மை நிலை தெரிய வரும்.

தங்கத்திற்கு எவ்வளவு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது?: தற்போதைய நிலவரப்படி தங்கத்திற்கான ஜிஎஸ்டி விகிதம் 3 சதவீதம் ஆகும். அதாவது நீங்கள் 10,000 மதிப்புள்ள தங்கத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு 300 ரூபாய் ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும். 2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க நகைத்துறை பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய 3 சதவீத ஜிஎஸ்டி பெரிய சுமையாக இருப்பதாகவும், இது வேலை வாய்ப்புகளை குறைப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. எனவே வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 3 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்க நகை துறையினர் பரிந்துரைத்துள்ளனர். இது அவர்களுடைய தொழிலுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் நிவாரணத்தை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை 2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் ஜிஎஸ்டி வரியைக் குறைத்தால் அது நகைகளின் விலையையும் குறைக்கும். இது தங்க விற்பனையை அதிகரிக்கும் என்று தொழில் துறை நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுங்க வரி குறையுமா?: இந்த முறையும் பட்ஜெட்டில் சுங்கவரி குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ்-இன் தலைவர் ஹரிஷ் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது. எனவே இந்த முறை தற்போதுள்ள வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லாமல் இருக்கும் வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.
பொதுவாக இந்தியாவில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சர்வதேச தங்க விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தாது. ஆனால் தங்கம் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டால் அது உள்நாட்டு தங்க விலையை பாதிக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications