டெல்லி: வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவர் தாக்கல் செய்ய இருக்கும் எட்டாவது பட்ஜெட் ஆகும்.
மத்திய பட்ஜெட் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கான ஓர் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு அறிக்கை ஆகும். இந்த பட்ஜெட்டில் அந்த ஓராண்டு காலத்தில் அரசு எவ்வளவு செலவு செய்யப் போகிறது, எவ்வளவு வருவாய் எதிர்பார்க்கிறது என்னென்ன நலத்திட்டங்களை செயல்படுத்த போகிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கி இருக்கும்.

இந்தியாவில் நிதியாண்டு என்பது ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை கணக்கிடப்படுகிறது. இந்த காலகட்டத்திற்கான நிதிநிலை அறிக்கை தான் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும். பட்ஜெட் தயாரிக்கப்படும் போது இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
செலவினம்: மக்கள் நல திட்டங்கள், பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட நிதிகள், அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி, இறக்குமதி ஆகியவை செலவினத்தில் வரும்.
வருமானம் : வரி மூலம் கிடைக்கும் வருமானங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானங்கள், அரசு பெறப்போகும் கடன்கள், அரசு பத்திரங்களை விற்பனை செய்து திரட்ட இருக்கும் நிதிகள் ஆகியவை வருவாய் என்ற பிரிவின் கீழ் வரும்.
பட்ஜெட் தயாரிக்கும் பணி என்பது பட்ஜெட் தாக்கலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிதித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பட்ஜெட் தாக்கல் பணிகளை தொடங்கி விடுவார்கள். நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான துறையில் பட்ஜெட் என்ற பிரிவில் தான் இந்த பணிகள் தொடங்கப்படும்.
அனைத்து அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட் பிரிவிலிருந்து ஒரு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். அதாவது நடப்பு ஆண்டில் அவர்களுடைய வருமானம் மற்றும் செலவினம் என்ன, வரக்கூடிய ஆண்டில் அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என கணிக்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.
சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சகங்களும் அதிகாரிகளும் தங்கள் துறைக்கான தேவைகள் என்னென்ன, எவ்வளவு வருமானம் வருகிறது, இந்த வருமானம் அதிகரிக்குமா அல்லது செலவினம் அதிகரிக்குமா என்பன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் மிக விரிவாகவும் கவனமாகவும் ஆய்வு செய்து தரவுகளை பொருளாதார விவகாரங்களுக்கான பட்ஜெட் பிரிவுக்கு அனுப்பி வைப்பார்கள். இதனை அடுத்து நிதித்துறை அமைச்சகத்திற்கு இந்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
நிதித்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் என்னென்ன துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யலாம் என்பதை முடிவு செய்து, ஒதுக்கீடு செய்வார்கள். சில குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் அமைச்சரவையிலும் அல்லது பிரதமரின் தலையீட்டிலும் தான் முடிவு எடுக்கப்படும்.
இதைத்தவிர நிதித்துறை அமைச்சகத்தை சார்ந்தவர்கள் மாநில அரசு பிரதிநிதிகள், வங்கி தலைவர்கள், வேளாண் கூட்டமைப்பின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் வர்த்தக யூனியன்களை சேர்ந்தவர்களிடம் பலகட்ட ஆலோசனைகளை நடத்துவார்கள். இந்த ஆலோசனைகளில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பட்ஜெட் உருவாக்கப்படும்.
Story Written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications