இந்திய மக்கள் அனைவரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மோடி 3.0 அரசின் 2025-26 மத்திய பட்ஜெட் அறிக்கையை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், இந்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் வருமான வரி விதிப்பில் ஏதேனும் தளர்வு இருக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் மத்திய நிதியமைச்சகம் வரி தாக்கல் செயல்முறையை எளிமைப்படுத்தி, வரி தொடர்பான பிரச்சனைகள் உருவாகுவதை குறைக்க இந்த முக்கியமான சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளது.

1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் விரிவான மறுஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் வரைவு அறிக்கை ஜனவரி மத்தியில் பொதுமக்கள் கருத்துக்காக வெளியிடப்பட உள்ளதாகவும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள மத்திய பட்ஜெட் தாக்கலில் முக்கிய அம்சமாக இந்த வருமான வரி விதிமுறை மாற்றங்கள் இருக்கும் என இதுகுறித்து விபரம் அறிந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மறுசீரமைப்பில் வருமான வரியில் எவ்விதமான மாற்றங்களும் இருக்காது, வரி செலுத்துவோர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், வரி நிர்வாகத்தை எளிமையாக்குவதற்கான நடைமுறைகள் மட்டுமே மத்திய நிதியமைச்சகம் கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வருமானவரி துறைக்கும், வரி செலுத்துவோருக்கமான வரி தொடர்பான முறன்பாடுகள் கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மார்ச் 2023 அன்று முடிவடைந்த நிதியாண்டில் இதன் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் ரூ.10.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வரி முரண்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த தடாலடி உயர்வு, தற்போதைய வரிச் சட்டங்களில் உள்ள சிக்கல்களையும் தெளிவின்மையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது, இது வரி செலுத்துவோருக்கும் வரி நிர்வாகத்திற்கும் கடுமையான சவால்களை ஏற்படுத்துகிறது.
இதை சமாளிக்கவே வருமான வரி செலுத்துவோருக்கு ஏதுவாக விளக்கங்கள், உதாரணங்களும் கொடுக்கப்பட மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் குறித்து கடந்த ஜூலை 2024 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரிச் சட்டத்தின் விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
முக்கிய மாற்றங்கள் வரப்போகிறது:
வருமான கணக்கீடு கட்டமைப்புகளை எளிமைப்படுத்துதல்: சிக்கலான கணக்கீடுகளை மக்களுக்கு எளிதாக விளக்க பார்முலா அடிப்படையில் மாற்றப்படும், இதனால் வரி தாக்கல் செயல்முறை எளிமைப்படுத்தப்படும்.
வரி ஆண்டை தரப்படுத்தல்: "மதிப்பீடு ஆண்டு" மற்றும் "நிதியாண்டு" ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் தற்போதைய நடைமுறை நீக்கிவிட்டு ஒரே ஆண்டு முறையை செயல்படுத்தப்படும்.
டேபிள் அடிப்படையில் விளக்கம்: வரி செலுத்துவோருக்கு தங்கள் வரித்தொகைகள் குறித்த தெளிவான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தகவலை டேபிள் வடிவில் விளக்கப்படும்.
கூடுதல் படிவங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்: வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செயல்முறை எளிதாகும்.
ஆன்லைன் சேவை: மக்கள் தாங்கள் செலுத்திய வரியை திரும்ப பெறும் போது சமர்ப்பிக்க தேவையான படிவங்கள் மற்றும் தகவல்களின் ஆன்லைன் கிடைக்கும் தன்மை எளிதாக்கப்படும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications