என்னது ரூ.15 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் புது சலுகையா..? பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

மத்திய அரசு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வேளையில், இப்போதே பல கணிப்புகள், தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகியிருக்கும் வேளையிலும், ரூபாய் மதிப்பு மோசமான நிலையில் இருக்கும் வேளையில் மத்திய அரசு வரியை குறைத்து மக்கள் கையில் அதிகப்படியான பணத்தை கொடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த எதிர்பார்ப்பை உண்மையாக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது, மத்திய நிதியமைச்சகத்தின் பட்ஜெட் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த 2 உயர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல் படி, மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரி குறைப்பை அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னது ரூ.15 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் புது சலுகையா..? பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

இந்த நடவடிக்கை மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிதி நிவாரணம் அளித்து, மந்தமாகி வரும் பொருளாதாரத்தைத் மேம்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இது தொடர்பாக பேசிய அரசு அதிகாரிகள், 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி குறைப்பு அளிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர். இதனால், குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கும் பல கோடி மக்கள் நேரடியாக பயனடைவர் என தெரிவித்துள்ளனர்.

தற்போதைய வரி விதிமுறைகளின்படி, 3 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்கள் 5% முதல் 20% வரை வரி செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் 30% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி பலகையை குறைக்கவே மத்திய அறசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வருமான வரி இரண்டு முறைகளில் வசூலிக்கப்படுகிறது, பழைய வரி முறை அல்லது புதிய வரி முறை இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். வாடகை வீடு, காப்பீடு போன்ற செலவுகளுக்கு வரி விலக்கு அளிக்கும் பழைய வரி முறை மற்றும் குறைந்த வரி விகிதங்களை வழங்கி, வரி விலக்குகளா ஏதும் இல்லாமல் உருவாக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி முறை ஆகியவை தற்போது நடைமுறையில் உள்ளது.

வரி குறைப்பின் அளவு மற்றும் விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து அதிகாரிகள் எதுவும் வெளியிடவில்லை. மேலும் வரி குறைப்பு இரண்டு வரி முறையில் குறைக்கப்படுமா அல்லது புதிய வரி குறைப்பு முறையின் கீழ் மட்டும் குறைக்கப்படுமா என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.

வருமான வரி குறைப்பு, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் இதற்காகவே வரி குறைப்பு அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் ஏழு காலாண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. அதிக உணவு பணவீக்கம், உயர்வ நுகர்வோர் செலவினங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+