டெல்லி: அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் கொள்கையை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஜனவரி 27ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி மத்திய அரசு, அரசு நிறுவனங்கள் மீதான தன்னுடைய அணுகு முறையை மறுபரிசீலனை செய்திருப்பதாக தெரிய வருகிறது.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் அரசின் ஆவணங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள செய்தியில் ,சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் எதிர்ப்பு காரணமாக அரசுக்கு சொந்தமான ஒன்பது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவினை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்திருக்கிறதாம்.
இதில் மெட்ராஸ் ஃபெர்டிலைசர், ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எம்எம்டிசி, என்பிசிசி , ஹட்கோ ஆகியவை இதில் அடங்கும் . இவற்றை தனியார்மயமாக்குவதை விடுத்து மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான பணிகளை அரசு கையில் எடுத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
பவன் ஹான்ஸ் (Pawan Hans) : அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நிறுவனம் இது. இதனை தனியார்மயமாக்க அரசு நான்குமுறை எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை புதுப்பிக்க அரசு 230 முதல் 350 மில்லியன் டாலர்கள் வரை நிதி வழங்க இருப்பதாக செய்தி குறிப்பிடுகிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்கள் புதுப்பிக்கப்படும் என்றும் புதிதாக ஹெலிகாப்டர்கள் குத்தகைக்கு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆர்ஐஎன்எல் (Rashtriya Ispat Nigam Ltd (RINL)): அரசுக்கு சொந்தமான கடனில் மூழ்கி இருக்கும் இந்த ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தை மீட்டெடுக்க அரசு 1.3 பில்லியன் டாலர்கள் நிதி தொகுப்பினை வழங்க உள்ளதாம். இந்த நிறுவனம் கடனிலிருந்து விடுபட்டு அதன் செயல்பாடுகளை மறுக்கட்டமைப்பு செய்ய முடியும் என அரசு நம்புகிறது.
எம்டிஎன்எல் (Mahanagar Telephone Nigam Ltd (MTNL)) : 2024-25 ஆம் பட்ஜெட்டிலேயே அரசு இந்த நிறுவனம் தன்னுடைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக 80 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.
மத்திய அரசினை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு திட்டமிட்டது. ஆனால் அதில் ஏர் இந்தியாவை டாடாவிற்கு விற்பனை செய்தது மட்டுமே வெற்றியாக அமைந்தது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை அரசு தனியார் மயமாக்க முன் வந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை யாரும் அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அதே போல ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக அரசு முன்வந்தது ஆனால் அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறி நிலுவையிலே இருக்கிறது.
ஐடிபிஐ வங்கியின் பெரும்பாலான பங்குகளை அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முன் வந்தது. ஆனால் இந்த விற்பனையானது மிகவும் மந்தமான நிலையிலேயே இருக்கிறது. மத்திய அரசு 2024 -25 ஆம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்களில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளில் சுமார் 200 பில்லியன் ரூபாய் வரையிலான பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 86 பில்லியன் ரூபாய் வரையிலான பங்குகளை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது.
பல்வேறு தொழிலாளர் யூனியன் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன . அதேபோல நீண்ட காலமாக அரசுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்களை வாங்கி மீண்டும் புதுப்பிப்பதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. எனவே தான் அரசு தன்னுடைய கொள்கையை மாற்றி இந்த நிறுவனங்களை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications