2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பட்ஜெட் அறிக்கை பரபரவென தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எலக்ட்ரிக் வாகன (EV) துறைக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியதுவம் கிடைக்குமா என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.
இந்திய எலக்ட்ரிக் வாகன (EV) சந்தை மதிப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் அதிர்ச்சியூட்டும் ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார், இதுமட்டும் அல்லாமல் மொத்த EV எகோசிஸ்டத்தில் சுமார் ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இந்தத் துறை அதன் வளர்ச்சி பாதையை கூடுதலாக வேகப்படுத்தும் வகையில் அரசின் திட்டங்கள், முயற்சிகள் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் என இத்துறையை சார்ந்தவர்களும், மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் EV துறை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ள போதிலும், குறைந்த அளவிலான சார்ஜிங் கட்டமைப்பு மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் அதீத விலை போன்ற பல சவால்கள் இன்னமும் உள்ளது. இந்த தடைகளை சமாளித்து நிலையான வளர்ச்சியை இத்துறையில் உருவாக்க, பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையில் EV எகோசிஸ்டத்தை ஆதரிக்கும் வகையில் புதிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
FAME திட்டம் போன்றவற்றின் மூலம் EV துறையை ஊக்குவிக்க மத்திய அரசு ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய FAME-II திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கிய போதிலும், 2024 மே மாதத்திற்குப் பிறகு இது நீட்டிக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக, மத்திய அரசு 2024-25 மத்திய பட்ஜெட்டில் PM-E டிரைவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஆனால் இது எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க விரும்பும் மக்களுக்கும் சரி, ஆட்டோமொபைல் துறைக்கும் போதுமானதாக இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் 2025-26 மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதை தாண்டி, EV துறையின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று EV பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும் என்பது தான். தற்போது, EV பேட்டரிகள் மற்ற வாகன பாகங்களை விட அதிக ஜிஎஸ்டி விகிதத்திற்கு உட்பட்டவையாக உள்ளது, இதை இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட வேண்டும்.
EV பேட்டரிகளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பது EV உற்பத்தியின் ஒட்டுமொத்த செலவை குறைக்கும், இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும், விற்பனையும் அதிகரிக்கும்.
மேலும், உள்நாட்டு பேட்டரி உற்பத்தி திறன்களில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். இந்தியா இன்னும் இந்த துறையில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவில்லை. எனவே இப்பிரிவுக்கு தனிப்பட்ட ஊக்கத்தொகைகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு அரசின் ஆதரவு ஆகியவை முக்கிய கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
எனவே பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் EV துறைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications