மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு வரி உயர்த்தவும், எந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி, வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும் எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் முதல் மருத்துவ கருவிகள் வரையிலான இறக்குமதி செய்யப்படும் முழுமையாக தயாரிக்கப்பட்ட சாதனங்கள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பொருட்களின் விலை உயரும். வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்ற மின்னணு சாதனங்கள் விலை அதிகரிக்கும். தற்சமயம் இறக்குமதியாகும் வாஷிங்மெஷின் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அடிப்படை வரி 10 சதவீதமாக உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகள் மீதான வரி மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என தெரிகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பாக வியட்நாமில் இருந்து வரும் பிபி மெஷின், ஆக்ஸிமேட் போன்ற மருத்துவ கருவிகளின் விலை உயரக்கூடும்.
நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தும் அதேவேளையில், மானுபாக்சரிங் கருவிகளில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்புள்ளது.
இதனால் இந்த உதிரிபாகங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. உள்நாட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் ஏற்றுமதி போட்டி திறனை அதிகரிப்பதற்காகவும் இந்த உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இறக்குமதி வரி எவ்வளவு குறைக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications