மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான 2025 பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அந்நாளில் பங்குச்சந்தை மூடப்பட்டு இருக்கும், இதன் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப முதலீடு செய்ய முடியாதென மக்கள் புலம்பி வந்த நிலையில் இன்று பங்குச்சந்தைகள் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் 2025 பிப்ரவரி 1 ஆம் தேதியன்று பங்குச் சந்தைகள் வர்த்தகத்திற்காகத் திறந்திருக்கும் என்று தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) அறிவித்துள்ளன. இதுதான் முதல் முறை என்றால் இல்லை, 2020 மற்றும் 2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டுகளுக்கும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிப்ரவரி 1 ஆம் தேதி முழுமையான வர்த்தக நாளாக இருக்கும், பங்குச்சந்தைகள் முதல் அனைத்து பிரிவுகளும் முழு நேரம் இயங்கும் என மும்பை பங்குச்சந்தை தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. பங்குச் சந்தைகள் காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை இயங்கும், ஆனால் அந்த நாளில் "T0" அடிப்படையில் பரிவர்த்தனை நடக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பிப்ரவரி 1 ஆம் தேதி தனது எட்டாவது தொடர்ச்சியான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு நிதி அறிக்கையில், அடுத்த நிதியாண்டிற்கான அரசின் செலவினங்கள் மற்றும் வருவாய் இலக்குகள் ஆகியவை அறிவிக்கப்படும்.
இதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய நிதித் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் முயற்சிகளை மத்திய அரசு வெளியிட உள்ளது.
மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் தினத்தன்று சந்தைகள் திறந்திருப்பதன் மூலம், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்கள் மீதான அறிவிப்புகளின் தாக்கம் தொடர்பாக முதலீட்டாளர்கள் உடனடியாக செயல்பட முடியும்.
நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரத் துறை, மத்திய பட்ஜெட் ஆவணங்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்கிறது. விரிவான பகுப்பாய்வு மற்றும் பல்வேறு அமைப்புகள், பிரிவுகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்டுத் தாக்கல் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications