டெல்லி: வரும் 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் Global Trade Research Initiative (GTRI) எனப்படும் ஜிடிஆர்ஐ அமைப்பு மத்திய அரசு வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5.7 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்தியாவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அரசு தனி நபருக்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என ஜிடிஆர்ஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பினை 2.5 லட்சம் ரூபாய் என உயர்த்தியது. அப்போதிலிருந்து தற்போது வரை ஆண்டுதோறும் நாட்டில் பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்த 2.5 லட்சம் ரூபாயின் இன்றைய மதிப்பு 1.4 லட்சம் ரூபாய்க்கு சமம் என ஜிடிஆர்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு வருமான வரி உச்ச வரம்பை 5.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாட்ஸவா நிலையான வருமான வரி கழிவுகள் மற்றும் விலக்குகளின் வரம்பை உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இந்தியாவில் சேமிப்பு டெபாசிட் திட்டங்களின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு ஒரு நிதியாண்டில் 10000 ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த 10000 ரூபாய் என்பது உயர்த்தப்படவே இல்லை . இதனை பணவீக்க அடிப்படையில் கணக்கிட்டு 19,450 ரூபாய் என உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான ப்ரீமியம் தொகை, வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு உள்ளிட்டவற்றுக்கு மொத்தமாக ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதன் தற்போதைய மதிப்பு 83,000 ரூபாய் தான். எனவே இந்த வரி விலக்கு வரம்பினை 2.6 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகைக்கு ஒரு நிதியாண்டில் 25000 ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது . 2016 ஆம் ஆண்டு இருந்து இது இதே அளவில் இருப்பதால் பணவீக்க அடிப்படையில் இதனை கணக்கீடு செய்து ஒரு நிதியாண்டுக்கு 41000 ரூபாய் என உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல இந்தியாவில் டிடிஎஸ் எனப்படும் மூலத்திலிருந்து கழிக்கப்படும் வரி நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதன்முறையாக டிடிஎஸ் அறிமுகம் செய்த போது ஊதியம் ,பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம், ஈவு தொகைகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தக்கூடிய தொகை ஆகிய நான்கு பிரிவுகளில் மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது அது 40 பிரிவுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது இதனை எளிமைப்படுத்த வேண்டும் என ஜிடிஆர்ஐ அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஈக்விட்டிகளில் கிடைக்கக்கூடிய நீண்டகால மூலதன லாபத்தில் 12.5% வரை வரி பிடிக்கப்படுகிறது, அது பிக்சட் டெபாசிட்டுகளில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு 30 சதவீதம் வரை வரி பிடிக்கப்படுகிறது. எனவே பலரும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு பதிலாக ஈக்குவிட்டி சந்தையை நோக்கி செல்கின்றனர். இந்த நிலையை மாற்றி இரண்டுக்குமே சமமான வரி விதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications