மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் உரையில், நம் நாட்டின் கிளீன் எனர்ஜி மாற்றத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சோலார் பிவி செல்கள், எலக்ட்ரோலைசர்கள் மற்றும் கிரிட் அளவிலான பேட்டரி உற்பத்தியை அதிகரிக்க, மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் ஒரு புதிய உற்பத்தி திட்டத்தை அவர் அறிவித்தார். பட்ஜெட்டில், கிளீன் பவர் டெக்னாலஜி எக்கோசிஸ்டமை உருவாக்குவதற்கான திட்டங்களை அறிவித்ததையடுத்து, கிளீன் எனர்ஜி துறையை சேர்ந்த பங்குகளின் விலை உயரத் தொடங்கியது. குறிப்பாக, வாரீ எனர்ஜிஸ், சுஸ்லான், அதானி கிரீன் எனர்ஜி, ஐனாக்ஸ் விண்ட், ஆக்மி சோலார், கேபிஐ கிரீன், ஜென்சோல் இன்ஜினீயரிங் உள்பட பல பங்குகளின் விலை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே வாரீ எனர்ஜிஸ் நிறுவன பங்கின் விலை சுமார் ரூ.163 உயர்ந்து ரூ.2,555.55ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே சுஸ்லான் நிறுவன பங்கின் விலை சுமார் ரூ.3 உயர்ந்து ரூ.61.05க்கு சென்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கின் விலை சுமார் ரூ.51 உயர்ந்து ரூ.1,050ஐ எட்டியது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஐனாக்ஸ் விண்ட் நிறுவன பங்கின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.188.45க்கு சென்றது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஆக்மி சோலார் நிறுவன பங்கின் விலை சுமார் ரூ.18 உயர்ந்து ரூ.233.00ஆக அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே கேபிஐ கிரீன் நிறுவன பங்கின் விலை தோரயமாக ரூ.16 உயர்ந்து ரூ.385.75 வரை சென்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையேஜென்சோல் இன்ஜினீயரிங் நிறுவன பங்கின் விலை சுமார் ரூ.37 உயர்ந்து ரூ.776.20ஆக அதிகரித்தது.
2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க அரசாங்கம் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் இந்த இலக்கை எட்ட உதவும்.


Click it and Unblock the Notifications