பட்ஜெட் வந்தாலே வருமான வரிக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படுவது பொருட்களின் விலைதான். அதிலும் கடந்த 5 ஆண்டுகால பட்ஜெட்டில் நாம் நினைத்தும் பார்க்காத சில பொருட்களி விலை கிடுகிடுவென உயர்ந்தது, அதுவும் பட்ஜெட்டால்தான். ஒவ்வொருமுறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே எந்தெந்த பொருட்களின் விலை உயரலாம் அல்லது விலை குறையலாம் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகும்.
பட்ஜெட் அறிவிப்பிக்குப்பின் சில பொருட்களின் விலை ஏறலாம் அல்லது இறங்கலாம். அதன்படி பிப்ரவரி 1 ஆம் தேதி நாளை 2024- 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்பிறகு சில பொருட்களின் விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது. அதில் அதிகம் அடிபடும் பெயர் தங்கம் தான்.

நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது ஒட்டுமொத்த மக்களுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால், வருமான வரி விலக்கில் மாற்றம் ஏதேனும் இருக்குமா? உச்ச வரம்பில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கும். அதை நோக்கி ஒட்டுமொத்த மக்களும் அந்த பட்ஜெட் அறிவிப்பை உற்று கவனிப்பார்கள்.
குறிப்பாக இந்தியாவில் பொறுத்தவரையில் வரி செலுத்தக் கூடியவர்கள் அதிகமானவோர் நடுத்தர வர்க்க மக்கள் தான் என புள்ளி விவரங்கள் சொல்லுவதால், அதன் அடிப்படையில் தான் வருமான வரி விலக்கில் மாற்றம் வருமா என்று ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், மக்கள் பயப்படுவது விலை உயரும் பொருட்களைப் பற்றித்தான். ஏனெனில் அந்த விலை உயர்வு அன்றாட உபயோகப் பொருட்களின்மீது வந்தால் அதிகம் பாதிக்கப்படுவதும் சமானிய மக்கள்தான். தகவல்களின்படி பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு எந்தெந்த பொருட்களின் விலை உயரலாம் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில், எரிபொருள், தங்கம், வாகனம் உள்ளிட்ட ஆட்டோமொபைல், மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த இரு ஆண்டு பட்ஜெட்டில் உணவு பொருட்கள் விலை 97% வரை உயர்ந்துள்ளன. அதற்கு பெரிய எடுத்துக்காட்டு 2023 தக்காளி விலை உயர்வுதான். பருவ நிலை மாற்றங்கள், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற இயற்கை காரணங்களால் தக்காளி விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications