மத்திய பட்ஜெட் 2026இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டுக் கடன் வட்டி கழிவு (deduction) குறித்து முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளும், விளக்கங்களும் 2ஆம் நிலை அறிவிப்புகளாக வெளியான காரணத்தால் பலருக்கும் இதுதொடர்பான விபரம் தெரியவில்லை. அப்படிப்பட்ட அறிவிப்பு தான் ஹோம் லோன் தொடர்பாக வந்துள்ளது.
எப்போதும் போல் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கும் வீட்டுக்கு கிடைக்கும் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டி கழிவு தொடரும். இதில் கட்டுமானம் அல்லது வாங்குதலுக்கு முன்பு (pre-construction / prior-period interest) செலுத்திய வட்டியும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு விதிமுறையை தெளிவுப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம் 2025-ல் பிரிவு 22(2)-இல் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கடனுக்கான கழிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமானத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் செலுத்திய வட்டி பற்றிய தெளிவின்மை இருந்தது.
இதனால் சிலர் இந்த சலுகை நீக்கப்பட்டு உள்ளதா, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வரி பலனை இழக்க நேரிடும் என்ற அச்சமும், கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் பழைய வருமான வரி சட்டம் 1961-இல் கட்டுமானத்திற்கு முன் அல்லது வீட்டில் குடியேறும் வரையிலாக காலக்கட்டத்தில் செலுத்திய வட்டியை தவணைகளுக்கும் இந்த 2 லட்சம் பொருந்தும் என இந்த பட்ஜெட்டில் விளக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் அறிவிப்பு மூலம் புதிய வருமான வரி சட்டம் 2025-ல் பிரிவு 22(2) திருத்தப்பட்டு உள்ளது. இனி வழக்கமான வட்டியுடன் pre-construction வட்டியும் ரூ.2 லட்சம் வரம்புக்குள் அடங்கும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விளக்கம் கொடுக்கப்படாவிட்டால் பலர் 2 லட்சம் மதிப்பிலான வரி பலனை இழக்க நேரிடும்.
உங்கள் சொந்த வீட்டுக்கு வாங்கிய கடனின் வட்டிக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரி கழிவு கிடைக்கும். வீடு கட்டும் போது அல்லது வாங்கி குடியேறுவதற்கு முன்பு செலுத்தப்பட்ட வட்டியும் இதில் சேரும் என்பது பெரும் நன்மை அளிக்கும் விஷயமாகும். இது வரி சுமையை குறைத்து, வீட்டு உரிமையாளர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும். பட்ஜெட் 2026 இந்த சலுகையை தொடர்ந்து பாதுகாத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications