Budget 2026: ஆட்டத்தை துவங்கிய நிர்மலா சீதாராமன்.. வரியை குறைக்க அடுத்தடுத்து வந்த கோரிக்கை..?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கம்போல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, நாட்டின் பொருளாதார திசையை தீர்மானிக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறகு.

மத்திய நிதியமைச்சம் இப்போதே பட்ஜெட் தயாரிப்புக்கான முன் ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்கிவிட்டன. நவம்பர் மாதம் மத்தியில் இந்த கூட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இக்கூட்டத்தில் பல முக்கியமான திட்டங்கள் கோரிக்கைகளும், தேவைகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Budget 2026: ஆட்டத்தை துவங்கிய நிர்மலா சீதாராமன்.. வரியை குறைக்க அடுத்தடுத்து வந்த கோரிக்கை..?

இந்திய அரசு 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ தயாரிக்கும் இதேவேளையில் சீனா தனது 5 ஆண்டு திட்டத்தை தயாரித்து வருகிறது. சீனாவின் 5 ஆண்டு திட்டத்தை உலகமே ஆய்வு செய்து வருகிறது, காரணம் அமெரிக்கா பொருளாதாரத்துடன் போட்டிப்போட்டு வரும் சீனா, இத்திட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சர்வதேச வர்த்தக சந்தையின் திசையை திரும்பும் வல்லமை கொண்டு உள்ளது.

பட்ஜெட் முன் ஆலோசனைகள்
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கருத்துக்களை சேகரிக்கும் வழக்கம் உள்ளது. இந்த முறையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக நவம்பர் 18 ஆம் தேதி, பங்குச் சந்தை நிபுணர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உற்பத்தித் துறையை சேர்ந்தவர்களை தனித்தனியே கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் மத்திய நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அனுராதா தாகூர், தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல முக்கியமான கோரிக்கை வைக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் தற்போது அதிகளவில் விவாதிக்கப்படும் 3 விஷயம் இதுதான்.

செக்யூரிட்டீஸ் டிரான்சாக்ஷன் டாக்ஸ் (STT)
பங்குச் சந்தை பிரதிநிதிகள் செக்யூரிட்டீஸ் டிரான்சாக்ஷன் டாக்ஸ் எனப்படும் பரிவர்த்தனை வரியை குறைக்க வேண்டும் என நிதியமைச்சக கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். தற்போது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் 0.1 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில் 0.02 சதவீதமும், ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் 0.1 சதவீதமும் வரி உள்ளது.

இந்த வரியை குறைத்தால், சாதாரண முதலீட்டாளர்கள் அதிகம் பயனடைவார்கள் என்று தெரிவித்தனர். குறிப்பாக பங்கு வர்த்தகத்தில் வரியை டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தை விட குறைவாக வைத்தால், நீண்டகால முதலீடு ஊக்குவிக்கப்படும் என்றும் கூறினர்.

பைபேக் டாக்ஸ் மாற்றம் தேவை
பொதுவாக நிறுவனங்கள் தங்கள் பங்குகளை சந்தையில் இருந்து மீண்டும் வாங்கும்போது (பைபேக்) விதிக்கப்படும் வரியையும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 2024 அக்டோபர் முதல் அமலாக்கம் செய்யப்பட்ட மாற்றம் மூலம் பைபேக் மூலம் பங்குதாரர்கள் பெறும் முழு தொகையும் டிவிடெண்ட் போல கருதப்பட்டு, அவர்களது வருமான வரி அடுக்கில் (சிலருக்கு 30 சதவீதம் வரை) வரி விதிக்கப்படுகிறது.

இதை மாற்றி, லாபம் மட்டும் வரி விதிக்கப்பட வேண்டும் என்று இத்துறை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இது நிறுவனங்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க எளிதாக்கும் என்று அவர்கள் கூறினர். இந்த வரியை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

பாண்ட் சந்தையை வலுப்படுத்த வேண்டும்
பங்குச் சந்தை வளர்ச்சிக்கு கார்ப்பரேட் பாண்ட் சந்தையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதாவது நிறுவனங்கள் வங்கிகளைத் தவிர பாண்ட் மூலம் பணம் திரட்டுவதை எளிதாக்க வேண்டும்.

இந்தியாவை 2047க்குள் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்கை அடைய கார்ப்பரேட் பாண்ட் சந்தையை மேம்படுத்த வேண்டும். இந்தியாவில் 2.8 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் சந்தையில், கார்ப்பரேட் பாண்ட் சந்தை பங்கீடு மட்டும் 23 சதவீதம் மட்டுமே, தற்போது இப்பரிவில் மத்திய மாநில அரசுகளின் பத்திரங்கள் மட்டுமே பெரும் ஆதிக்கத்தை செய்து வருகிறது.

இந்த நிலையில் இக்கோரிக்கைளை மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை செய்து, இதன் மூலம் மத்திய அரசுக்கும் நாட்டின் நலனுக்கும் எந்த அளவுக்கு நன்மை அளிக்கும் என்பதை ஆய்வு செய்து அதன் பின்னரே முடிவுகள் எடுக்கப்படும்.

மத்திய அரசு ஏற்கனவே ஜிஎஸ்டி கட்டமைப்பை மறுசீர்படுத்திய காரணத்தால் வர அடுக்குகள் குறைக்கப்பட்டு, வரி வருவாய் குறைந்துள்ளது. இதனால் இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பை குறைக்க முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதேவேளையில் 2026ல் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் காரணத்தால் அதிரடியான அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+