இந்திய பொருளாதாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் கனவுடன் இன்னும் சில வாரங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் பணிகளின் ஒருபகுதியாக மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் பல துறைகளை சார்ந்த அதிகாரிகள், உறுப்பினர்கள், வல்லுனர்கள் ஆகியோரை சந்தித்து வருகின்றனர்.
இந்க நிலையில் 2026ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ட்ரோன் சக்தி என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரோன் தற்போது பொழுதுபோக்கு முதல் ராணுவ பாதுக்காப்பு வரையில் பல இடத்தில் முக்கியமானதாக மாறியிருக்கும் வேளையில் மத்திய அரசு 10000 கோடி மதிப்பீட்டில் மெகா திட்டத்தை அறிவிக்க உள்ளது.

இத்திட்டம் மூலம் இந்தியாவை உலகின் டாப் சிவிலியன் ட்ரோன் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், இத்திட்டம் ஐந்து ஆண்டு காலம் செயல்படும் திட்டமாக இருக்கும்.
மேலும் இத்திட்டத்திற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கு நிதி அமைச்சகம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு அடுக்கு மானியம்
புதிய திட்டம் இரு அடுக்கு மானிய அமைப்பை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் அடுக்கில் ட்ரோன் உற்பத்தி தொழிற்சாலைகள், தொடர்புடைய உள்கட்டமைப்புக்கு மூலதன செலவில் 10-15 சதவீத மானியம் வழங்கப்படும். இக்கட்டத்தில் மத்திய அரசு குறைந்தபட்ச வருவாய் இலக்கு, காலக்கெடு கொண்ட முதலீடு நிறைவு ஆகிய நிபந்தனைகளை விதிக்கும்.
இரண்டாவது அடுக்கில் உற்பத்தி அளவுக்கு 10-15 சதவீத மானியம் தரப்படும். இது ட்ரோன்களை இறக்குமதி செய்வதை குறைப்பதை நோக்கமாக கொண்டு இயங்கும். ட்ரோன் தயாரிப்பில் பல முக்கிய உதிரிபாகங்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால் விலை வேறுபாடு உள்ளது. இதை குறைக்க இந்த மானியம் உதவும்.
இந்த புதிய திட்டம் ஏற்கனவே உள்ள ட்ரோன் PLI திட்டத்துடன் இயங்காமல், கூடுதல் மானியத்துடன் தனியாக இயங்கும்.


Click it and Unblock the Notifications