நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2026 பேச்சில் சர்வதேச சுற்றுலாவுக்கான TCS-ஐ குறைத்ததுடன், கல்வி செலவுகளுக்கு TDS-ஐ குறைத்து, முக்கியமான மருந்துகளின் மீதான வரி குறைத்தது, விமான பராமரிப்பு உதிரி பாகங்கள் மீதான கலால் வரி குறைத்தது மூலம் பல பொருட்கள் மலிவாக்கிறது.
இந்த நிலையில் மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் ஒவ்வொரு ரூபாயும் எங்கிருந்து வருகிறது, எங்கு செலவு செய்யப்படுகிறது என்பதை படம் போட்டு விளக்கியுள்ளது.

மத்திய பட்ஜெட் 2026 அரசின் நிதி நிலவரத்தை எளிமையான "ரூ.1" இன்போகிராபிக்ஸ் மூலம் விளக்குகிறது. இது சாதாரண மக்களுக்கு அரசு எங்கிருந்து பணம் பெறுகிறது, அதை எங்கு செலவு செய்கிறது என்ற இரு அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இந்த விளக்கம் அரசின் வருவாய் மற்றும் செலவு போக்குகளை மக்களுக்கு தெளிவாகக் காட்டுகிறது.
ரூ.1 எங்கிருந்து வருகிறது?
அரசின் ரூ.1 வருமானத்தில் கடன் மற்றும் பொறுப்புகள் 24 பைசா ஆகும். இதன் மூலம் மத்திய அரசு தனது செலவுகளில் கால் பகுதியை கடனால் நிறைவேற்றுவதை காட்டுகிறது.
இதை தொடர்ந்து வருமான வரி 21 பைசா, நிறுவன வரி 18 பைசா, ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் 15 பைசா. வரி அல்லாத வருவாய் 10 பைசா, மத்திய எக்சைஸ் வரி 6 பைசா, சுங்க வரி 4 பைசா, கடன் திரும்பப்பெறுதல் மற்றும் விற்பனை மூலம் 2 பைசா ஈட்டுகிகறது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக வரிகள் மூலம் 58 பைசாவை தருகின்றன, கடன் 24 பைசாவை அளிக்கிறது.
ரூ.1 எங்கு செல்கிறது?
அரசின் ரூ.1 செலவில் மாநிலங்களுக்கு வரி பகிர்வு 22 பைசா ஆகும். வட்டி செலுத்துதல் 20 பைசா, மத்திய திட்டங்களுக்கு 17 பைசா, பாதுகாப்பு துறைக்கு 11 பைசா ஆகும். மாநிலங்களுடன் இணைந்த திட்டங்கள் 8 பைசா, நிதி ஆணையம் மற்றும் பிற இடமாற்றங்கள் 7 பைசா, முக்கிய மானியங்கள் 6 பைசா, பிற செலவுகள் 7 பைசா, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 2 பைசா ஆகும்.
மக்களுக்கு இதன் பொருள்
அரசின் வருவாயில் கடன் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்காலத்தில் வட்டி சுமை அதிகரிக்கலாம். தற்போது வட்டி செலுத்துதல் 20 சதவீதம் செலவாகிறது, இதனால் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியியல் ரீதியாக வாய்ப்புகள் குறையலாம்.
அரசு ரூ.1 பெறுவதில் 24 பைசா கடன், 58 பைசா வரி, மீதி பிற வழிகளில் வருகிறது. செலவில் 22 பைசா மாநிலங்களுக்கு, 20 பைசா பழைய கடன் வட்டி, மீதி பாதுகாப்பு, திட்டங்கள், மானியங்கள் ஆகியவற்றுக்கு செல்கிறது. இது தான் மத்திய அரசின் நிதி மேலாண்மை.


More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications