2026 மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவை உலகின் முன்னணி Brain Hub ஆக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு இந்த பட்ஜெட் வாயிலாக கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்த வேகத்திற்கு இந்திய டெக் துறையும், மக்களும் வருகிறார்களாக என்றால்..? இல்லை என்பது தான் இதற்கான பதிலாக இருக்கிறது.
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய தூணாக இருக்கும் ஐடி துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இதேவேளையில் இந்தியாவில் குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCC) என்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகளை அமைப்பதில் இந்தியா முக்கிய இடமாக உள்ளது.

ஒருபக்கம் குறைந்த செலவில் கிடைக்கும் ரியல் எஸ்டேட் வசதிகள், குறைந்த சம்பளத்தில் திறன்வாய்ந்த ஊழியர்கள் கிடைக்கும் சந்தை என்பதால் இந்தியா உலகளாவிய GCC சந்தையில் முக்கியமானதாக மாறியுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் குறைந்த செலவில் ஐடி சேவை அளிக்கும் ஒரு பேக் ஆஃபீஸ் சந்தையாக மட்டுமே இல்லாமல் GCCகள் மூலம் இப்போது உயர் மதிப்பு கொண்ட இன்னோவேஷன் மையங்களாக மாற உள்ளன.
இதுமட்டுமா.. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1 சதவீதத்திற்கு மேல் GCC பங்களிக்க துவங்கியுள்ளது. மேலும் சேவை துறை ஏற்றுமதியில் ஜிசிசி சுமார் 20 சதவீதம் பங்களிக்கிறது. இதன் மூலம் இந்திய ஜிசிசி துறை 2030 இறுதிக்குள் 100 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை நோக்கி செல்கிறது.
இதனால் ஜிசிசி துறையின் வேகமான வளர்ச்சிக்கும், தொடர்ந்து திறன்வாய்ந்த ஊழியர்களின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரிக்கும் முடிவுடன், 2026 பட்ஜெட்டில் பெரிய அளவிலான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் அறிவித்த நேஷ்னல் ப்ரேம்வொர்க் பயன்படுத்தி இந்திய மக்களின் திறன்மேம்பாட்டில் முக்கிய திட்டத்தை அறிவிப்பார் என்று தெரிகிறது. அந்த கட்டமைப்பு GCCகளை நாடு முழுவதும் 2ஆம் நிலை நகரங்களுக்கு விரிவுபடுத்த தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பதற்கான வழிவகை செய்கிறது.
அவ்வபோது மத்திய அரசு திறன் மேம்பாடு குறித்து அறிவித்து வருவதை மக்களும், இளைஞர்களும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். எப்படி 1990களில் ஜாவா படித்தால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை கொடுக்கப்பட்டதோ அதேபோல் தற்போது அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் மாணவர்கள் மத்தியில் திறன்மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே திறன் மேம்பாடு தான் இந்தியாவின் அடுத்தக்கட்ட டெக் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகிறது. ஆனால் இந்த திறன் மேம்பாடு பள்ளிகளில் இருந்து துவங்குமா, கல்லூரிகளில் இருந்து துவங்குமா என்பது முக்கிய கேள்வி.

இந்தியா, உலகின் சுமார் 17 சதவீத GCCகளை கொண்டுள்ளது. ஆனால் திறன் பற்றாக்குறை பெரிய சவாலாக உள்ளது. GCCகளில் பாதிக்கும் மேற்பட்டவை திறன்வாய்ந்த ஊழியர்களை தக்கவைப்பதை மிகப்பெரிய கவலையாக கூறுகின்றன. AI, டேட்டா அனாலிட்டிக்ஸ், க்ளவுட், பிளாட்ஃபார்ம் இன்ஜினியரிங் போன்ற மேம்பட்ட பணிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ஆய்வுகள் படி AI மற்றும் அனாலிட்டிக்ஸில் 40 சதவீதத்திற்கு மேல் திறன் பற்றாக்குறை இந்தியாவில் உள்ளது, இதேபோல் பிளாட்ஃபார்ம் இன்ஜினியரிங்கில் 39 சதவீதம், க்ளவுட் மற்றும் உள்கட்டமைப்பில் 25 சதவீதம் திறன் இடைவெளி உள்ளது.
இந்த இடைவெளியை சரிசெய்ய 2026 பட்ஜெட் முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இலக்கு சார்ந்த திறன் பயிற்சி திட்டங்கள் மூலம் இளம் பணியாளர்களின் திறனை முழுமையாக பயன்படுத்தி, உயர் மதிப்பு டிஜிட்டல் பணிகளில் அமர்த்துவது மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு புதிய ஊக்கத்தை கொடுக்கும்.
GCCகள் இப்போது வெறும் IT சேவைகளுக்கு அல்ல; இவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. திறன் மேம்பாட்டுக்கு பெரிய ஒதுக்கீடு செய்வதன் மூலம் அரசு இந்த துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தலாம். டயர்-2 நகரங்களில் GCCகள் அதிகரிப்பதால் உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் இருக்கும் வித்தியாசத்தை சமன் செய்யலாம்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications