மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2026 அறிக்கையில் பலரும் கவனிக்காத ஒரு அறிவிப்பு இது. ஷேர் பைபேக் (share buyback) வரி முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளார்.
இனி பங்குதாரர்கள் பங்குகளை பைபேக் மூலம் பெறும் தொகையை டிவிடெண்ட் வருமானமாக கருதாமல் மூலதன லாபமாக (Capital Gains) வரி விதிக்கப்படும். இதன் மூலம் வரி சுமை பெரிய அளவில் குறையும். இது வரி முறையை எளிமையாக்குவதுடன் வரி தவிர்ப்பு வழிகளை மூடும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரையில் மத்திய அரசு பைபேக் செய்யும் போதும் பெறும் தொகையை டிவிடெண்ட் வருமானமாக கருதப்பட்டது. டிவிடெண்ட் வருமானமாக கருதப்பட்டால், இது அவர்களின் வருமான வரி அளவுக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது.
இதோடு நிறுவனங்களும் சில சமயங்களில் தனி பைபேக் வரி செலுத்தின. இது சிக்கலானதாகவும், சமமற்றதாகவும் இருந்தது வந்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என முடிவு செய்த மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இப்போது பைபேக் தொகை மூலதன லாபமாக கணக்கிட பட்ஜெட்டில் உத்தரிவிட்டு உள்ளது. அதாவது டிவிடெண்ட் தொகையாக கணக்கிட்டால் வரி பலகை அடிப்படையில் 30% (பெரும்பாலானவர்கள் செலுத்தும் வரி பலகை), இதையே மூலதன லாபமாக கணக்கிட்டால் LTCG (12.5%), STCG (20%) அடிப்படையில் முதலீட்டு காலத்தின் அடிப்படையில் வரியை செலுத்தினால் போதுமானது.
மேலும் இதை எப்படி கணக்கிட வேண்டும் என்பதையும் பார்ப்போம். வரி கணக்கீடு = பைபேக் விலை - பங்கு வாங்கிய விலை. அதாவது லாபத்திற்கு மட்டும் செலுத்தினால் போதும், இதுவே டிவிடெண்ட் தொகையாக கணக்கிட்டால் மொத்த தொகைக்கும் வரி பலகை அடிப்படையில் செலுத்த வேண்டும். இந்த மாற்றம் மூலம் சந்தையில் பங்கு விற்பதற்கு இணையாக இந்த பைபேக் திட்டமும் மாறும். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது சலுகையாக அமையும்.
இதேபோல் பைபேக் தொகைக்கான வரி கணக்கீட்டில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ப்ரோமோட்டர்களுக்கு வேறுபட்ட வரி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவன ப்ரோமோட்டர்களுக்கு பைபேக் லாபத்துக்கு 22 சதவீதமும், வெளிநாட்டு அல்லது மற்ற ப்ரோமோட்டர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications