நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் 2026-இல் கிரிப்டோகரன்சி மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA) தொடர்பாக தளர்வுக்களை அளிக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் பெரும் ஏமாற்றம். இதுமட்டுமா அதிர்ச்சி அளிக்கும் வகையில் அபராத அறிவிப்பையும் வெளியிட்டு மொத்தமாக செக்.
அதாவது மத்திய அரசு பல கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகள் விடுத்தும் கடுமையான வரிகளை விதித்த பின்பும் இன்னும் பல கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிரிப்டோ முதலீட்டு சந்தையை ஸ்ட்ரீம்லைன் செய்ய திட்டமிட்ட நிர்மலா சீதாராமன் முக்கியமான ஒரு அபராதத்தை அறிவித்துள்ளார்.

அதாவது கிரிப்டோகரன்சி மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA) முதலீடு செய்தவர்கள் முறையாக அரசுக்கு ஸ்டேட்மென்சட் வாயிலாக அறிக்கை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது தவறான தகவல் அளிப்பவர்களுக்கு கடுமையான அபராத விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகம் மக்களிடையே வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பட்ஜெட் அறிவிப்பின்படி, வருமான வரிச் சட்டம் 2025 பிரிவு 509-இன் கீழ் அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு தினசரி ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தவறான தகவல் அளித்தவர்களுக்கு ரூ.50,000 அபராதமும், தவறை சரிசெய்யத் தவறினால் கூடுதல் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விதிகள் கிரிப்டோ வர்த்தகத்தில் முழு இணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன என விளக்கியுள்ளது.
இதன் மூலம் கிரிப்டோகரன்சி மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA) முதலீடு செய்தவர்கள் அனைவரும் கட்டாயம் வருமான வரித்துறையிடம் தனது முதலீட்டு விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் தினமும் 200 ரூபாய் அபராதம் கணக்கிடப்பட்டு மொத்தமாக வசூல் செய்யும். இதனால் கிரிப்டோ முதலீட்டில் கிடைக்கும் சிறிய லாபமும் மொத்தமாக இழக்க வேண்டியிருக்கும்.
உலக அளவில் கிரிப்டோ, டோக்கனைசேஷன், சொத்துக்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி வர்த்தகம் செய்யும் போக்கு வேகமெடுத்துள்ளது. கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, நிலம் போன்றவை கூட டோக்கனாக மாற்றப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகம் கடுமையான வரி விதிப்பால் முடங்கியுள்ளது. 30 சதவீத பிளாட் வரி, சர்சார்ஜ்-செஸ் சேர்த்து 34.5 சதவீதம் வரை உயரும் வரி விகிதம் முதலீட்டாளர்களை இதில் நுழைய விடாமல் துரத்தி வருகிறது.
கிரிப்டோகரன்சி மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA) முதலீட்டில் ஏற்படும் நஷ்டத்தை மற்ற VDA லாபத்துடன் சரிக்கட்ட வாய்ப்பு கூட மத்திய நிதியமைச்சகம் அளிப்பது இல்லை. மேலும் நஷ்டத்தை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது, வாங்கிய விலை தவிர பிற செலவுகள் கழிக்க முடியாது என்ற விதிகள் இன்னும் தொடர்கின்றன.
இந்த நிலையில் பட்ஜெட் 2026 கிரிப்டோ துறைக்கு விடிவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் புதிய அபராத விதிகள் கிரிப்டோ வர்த்தகத்தை இன்னும் கட்டுப்படுத்தும் வகையிலேயே உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications