மத்திய பட்ஜெட் 2026இல் சவரின் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bonds - SGB) மீதான மூலதன லாப வரி (capital gains tax) விலக்கு விதிகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலதன லாப வரி விலக்கு என்பது தங்க பத்திரத்தை ஆரம்ப வெளியீட்டில் (original issue) தனிநபர்களால் வாங்கப்பட்டு முதிர்ச்சி அடையும் வரையில் தொடர்ந்து வைத்திருந்தால் மட்டுமே கிடைக்கும். இரண்டாம் சந்தையில் அதாவது ஒரு தனிநபரிடம் இருந்து மற்றொருவர் வாங்கியிருந்தால் (secondary market) இந்த சலுகை இல்லை.

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அனைத்து SGB வெளியீடுகளுக்கும் இந்த விலக்கு ஒரே மாதிரியாக பொருந்தும். முன்பு இந்த மூலதன லாப வரி விலக்கு என்பது பிரிவு 70(1)(x)ன் கீழ் முதிர்ச்சி அடைந்து பணத்தை பெறும் அனைவருக்கும் வழங்கப்பட்ட போது கிடைத்தது. இப்போது இது ஆர்பிஐயிடம் இருந்து நேரடியாக வாங்கியவப்களுக்கு மட்டுமே கிடைக்கும் என விதியை மாற்றியுள்ளது.
இரண்டாம் சந்தையில் வாங்கிய முதலீட்டாளர்கள் பொதுவாக விலை ஏற்ற இறக்கத்தை பயன்படுத்துபவர்கள் அல்லது பணப்புழக்கத்துக்காக வாங்குபவர்களாக இருப்பார்கள். இதனால் secondary marketல் வாங்கிய விலைக்கும், விற்கப்படும் மதிப்புக்கும் இடையிலான வித்தியாசத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு கூடுதல் வரி சுமையை ஏற்படுத்தும்.
இந்த மாற்றத்தின் நோக்கம் வரி சலுகையை உண்மையாக ஆர்பிஐயிடம் இருந்து வாங்குபவர்களுக்கு மட்டும் அளிக்க வேண்டும் என்ற முடிவில் எடுக்கப்பட்டவை. இரண்டாம் சந்தை பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகை தவறுதலாக விரிவடைவதை தடுப்பதே இதன் குறிக்கோள். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கேப்பிடல் கெயின்ஸ் வரி சலுகை தொடரும்.
SGB-ஐ பாதுகாப்பான தங்க முதலீடாக பார்ப்பவர்கள் ஆரம்ப வெளியீட்டில் வாங்கினால் வரி விலக்கு கிடைக்கும். இரண்டாம் சந்தையில் வாங்கினால் விற்கும் போது வரி செலுத்த வேண்டியிருக்கும், இது STCG மற்றும் LTCG அடிப்படையில் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications