மத்திய பட்ஜெட் 2026 நெருங்கி வரும் நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது திரும்பியுள்ளது. குறிப்பாக விலைவாசி உயர்வால் திணறி வரும் நடுத்தர வர்க்கத்தினர், இந்த முறையாவது வருமான வரியில் மிகப்பெரிய சலுகைகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
புதிய வரி முறையில் (New Tax Regime ) நிலையான வரிக் கழிவு உயர்வு, வரி அடுக்குகளில் அதிரடி மாற்றம் மற்றும் சேமிப்புகளுக்கான கூடுதல் வரி விலக்கு என பல்வேறு சர்ப்ரைஸ் அறிவிப்புகள் வெளியாகலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சம்பளதாரர்களின் பாக்கெட்டில் கூடுதல் பணம் மிஞ்சுமா? அல்லது ஏமாற்றமே மிஞ்சுமா? என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகவும் உள்ளது.. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் இந்த பட்ஜெட், நடுத்தர மக்களின் நம்பிக்கையை ஈடுகட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வருமான வரி மாற்றங்கள் நிகழுமா?
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி முறையில் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்து, நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தார். இது பலருடைய வருமான வரி சுமையை கணிசமாக குறைத்தார். இதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2026-லும் தங்களுக்கு பயனளிக்கும் வகையில் வருமான வரி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என வரி செலுத்துவோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இருப்பினும், இந்த ஆண்டு வருமான வரியில் பெரிய அளவிலான குறைப்புகள் இருக்காது என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டே வரி முறையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டதால், இந்த முறை வரி முறைப்படுத்துதல் (Tax Rationalisation), TDS விதிகள் மற்றும் நிலையான கழிவுகள் ஆகியவற்றில் மட்டுமே சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விலக்குகள்?
அரசின் செலவினங்கள் அதிகரிப்பின் காரணமாக பட்ஜெட்டில் அரசு மூலதன செலவினங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தலாம். தனிநபர் வருமான வரியில் இந்த ஆண்டு பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வரி விலக்குகளை வெறும் தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் சுருக்கிக் கொள்ளாமல், இதர சேமிப்புகளையும் அங்கீகரிக்க வேண்டும். அதிக வருமானம் ஈட்டுபவர்கள் தங்களுக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க இபிஎஃப், பிபிஎஃப், இ எல் எஸ் எஸ் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களையே நம்பியிருக்கிறார்கள் என்பதை அரசு அங்கீகரிக்க வேண்டும்.
பணவீக்கம் மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, புதிய வரி முறையில் நிலையான கழிவை 75,000-ரூபாயிலிருந்து 1,00,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். இந்த உயர்வு அமலுக்கு வந்தால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் வாங்குவோரின் கையில் புழங்கும் பணம் அதிகரிக்கும். இது வளர்ச்சியை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்கள் எதிர்பார்ப்பது போன்ற சலுகைகள் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications