2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிநபர்களுக்கான TDS வரி கழிப்பைக் குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலருக்கும் மறைமுகமாக லாபம் அளிப்பது மட்டும் அல்லாமல் வருமான வரி ரீபண்ட் தொகை கணக்கீட்டை எளிதாக மாற்றக்கூடியதாக உள்ளது.
பட்ஜெட் 2024 அறிவிப்பின்படி, வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை, வெளிநாட்டுச் சுற்றுலா பயணம் மற்றும் கார் வாங்குதல் போன்றவற்றிற்கு டிசிஎஸ் (Tax Collected at Source) செலுத்தியுள்ள தனிநபர்கள் தற்போது தங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் (TDS - Tax Deducted at Source) தொகையைக் குறைப்பதற்காக தங்கள் நிறுவனத்திடம் சலுகை பெற முடியும்.

இதன் மூலம், நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் டிடிஎஸ் கணக்கிடும் போது, அவர்களின் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் அல்லது பிற பணப் பரிமாற்றங்கள் (கார் மீதான டிசிஎஸ் போன்றவை) தொடர்பான TCS கருத்தில் கொண்டு சம்பளத்தில் குறைவான தொகையை TDS-ல் கழிக்க முடியும். இதற்கான விபரத்தை ஊழியர்கள் நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்.
இந்த மாற்றம் மூலம் ஊழியர்களுக்குக் குறைந்த டிடிஎஸ் கழிக்கப்பட்டு, வருமான வரி செலுத்தும் போது அதிகமாகச் செலுத்தப்பட்ட வரியை ரீபெண்ட் பெறும் போது வேகமாகவும், எளிதாகவும் பெற முடியும். இதேவேளையில் TDS குறைவாகக் கழிக்கப்படுவதால் ஒவ்வொரு மாதமும் கூடுதலான சம்பளம் கைக்குக் கிடைக்கும்.
2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மத்திய அரசு LRS கீழ் வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற தொகைக்கு டிசிஎஸ் அளவீட்டை 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் விதிக்க ரூ.7 லட்சம் வரம்பை நிதி அமைச்சகம் நிர்ணயித்து, மேலும் இந்த புதிய வரி ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
முன்னதாக, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள், வெளிநாட்டுச் சுற்றுலா பயணம் மற்றும் கார் வாங்குதல் போன்றவற்றுக்காகச் செலுத்திய டிசிஎஸ் தொகையை, தங்கள் ஐடிஆர் (Income Tax Return) தாக்கல் செய்யும் போது, தனிநபர்கள் திருப்பிப் பெற வேண்டியிருந்தது. இது ஒரு நீண்ட நெடிய பணியாக இருந்தது, மேலும் பலருக்கு வரி ரீபண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
புதிய அறிவிப்பின்படி, முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் டிசிஎஸ் கணக்கீட்டில் டிசிஎஸ் தொகையைக் கருத்தில் கொள்ள முடியும். இதன் விளைவாக, சம்பளத்திலிருந்து குறைவான டிடிஎஸ் கழிக்கப்படுவதுடன், வருமான வரி ரீபண்ட் வேகமாகக் கிடைக்கும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications